அப்பாவுக்காக 51 வயதிலும் குழந்தை போல ஓடும் விஜய்.. ஜன நாயகன் ஆடியோ லான்ச்க்கு ஜேசன் சஞ்சய் வரலையே?
மலேசியா: கேவிஎன் தயாரிப்பில் அ. வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், நாசர், நரேன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நள்ளிரவை கடந்து ரசிகர்களின் அன்புடன் களைகட்டியது.
விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே அவரது குடும்பத்தில் இருந்து அவருக்கு துணையாக அப்பா சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா தான் அனைத்து இடங்களிலும் பங்கேற்று வருகின்றனர்.

விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் மற்றும் குழந்தைகள் பெரிதாக கலந்துக் கொள்வதில்லை. இந்நிலையில், அப்பாவுக்காக விஜய் ஓடிச் சென்று அவருடன் பேசிய காட்சிகள் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளன.
விஜய் மனைவி, குழந்தைகள் வரல: தனது மகனின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க அம்மா ஷோபா மற்றும் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட குடும்பத்தினர் மலேசியாவுக்கு வந்துள்ளனர். இந்த இசை வெளியீட்டிலாவது சங்கீதா, ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா உள்ளிட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் யாருமே பங்கேற்கவில்லை.
அப்பாவுக்காக ஓடி வந்த விஜய்: 51 வயதாகும் நடிகர் விஜய் தனது தந்தை அப்பாவால் உன் கிட்ட வர முடியலப்பா என மேடை ஏறி பேசும் போது விஜய்க்கும் மேடைக்கும் இடையே 800 மீட்டர் ரேம்ப் இருந்த நிலையில், அப்பாவுக்காக 51 வயதிலும் விஜய் குழந்தையை போல ஓடிச் சென்று அவருடன் நின்று பேசிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.
ஜேசன் சஞ்சய் வந்திருக்கலாமே?: விஜய்க்கும் அவரது குடும்பத்துக்கும் இடையே என்ன பிரச்னை என்கிற கேள்வி மீண்டும் சோஷியல் மீடியாவில் கிளம்பியிருக்கிறது. தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ள ஜேசன் சஞ்சய் அப்பாவுக்காக வந்திருக்கலாமே என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்கள் குடும்பத்தில் என்ன பிரச்னை என்பது யாருக்கும் தெரியும். அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் என்றும் தளபதி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். விஜய் சினிமாவை விட்டு விடைபெறுவதும், விஜய் மகன் இயக்குநராக சினிமாவில் அறிமுகமாவதும் அடுத்த ஆண்டு நடைபெற போகிறது.


Click it and Unblock the Notifications