தொடர் ட்ரெண்டிங்கில் விஜய்யின் 48வது பிறந்தநாள் காமன் டிபி.. மாஸ் காட்டும் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாள் வரும் 22ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்தப் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட கடந்த ஒரு மாதமாக அவரது ரசிகர்கள் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் விஜய் பிறந்தநாளையொட்டி காமன் டிபியை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விஜய் பிறந்தநாள்

நடிகர் விஜய் பிறந்தநாள்

நடிகர் விஜய் தனது 48வது பிறந்தநாளை வரும் 22ம் தேதி கொண்டாடவுள்ளார். அவர் எப்போதும் போல தனது சூட்டிங்கில் பிசியாக காணப்படுவார். அதிக அளவில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதில்லை. ஆனால் அவரது ரசிகர்கள் அப்படி அவரது பிறந்தநாளை எளிதாக எப்போதும் விட்டதில்லை. பல விஷயங்களை நடத்தி அவரது பிறந்தநாளை எப்போதும் மறக்க முடியாததாக்கி வருகின்றனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

அந்த வகையில் இந்த ஆண்டும் பல விஷயங்களை செய்து வருகின்றனர். ஒரு மாதமாகவே இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான திட்டங்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய் படங்களின் மாஷ் அப், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். சமூக நலப்பணிகளையும் திட்டமிட்டு வருகின்றனர்.

விஜய் பட அறிவிப்புகள்

விஜய் பட அறிவிப்புகள்

விஜய் படங்களின் தயாரிப்பாளர்களும் அவரது பிறந்தநாளையொட்டி அவரது பட அறிவிப்புகள், அப்டேட்கள் உள்ளிட்டவற்றை அன்றைய தினம் வெளியிடுவார்கள். இதற்கென விஜய் ரசிகர்கள் பல நாட்கள் காத்திருப்பார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டில் விஜய் படமான பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது. இந்த விஷயத்தை திருவிழாவாக கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

அதிக வியூஸ்கள்

அதிக வியூஸ்கள்

உடனடியாக அந்த போஸ்டர்களை ட்ரெண்டிங் ஆக்கினார்கள். இதேபோல பிறந்தநாள் மட்டும் இல்லாமல் விஜய் படங்களின் ட்ரெயிலர், டீசர், பாடல்களையும் உடனடியாக ட்ரெண்டிங் செய்து லட்சக்கணக்கான வியூஸ்களை சில நிமிடங்களில் பெற செய்கின்றனர். இதனால் எப்போதும் முன்னணியில் அதிக வியூஸ்களை பெறும் ட்ரெயிலர் வரிசையில் விஜய் படங்களே முன்னணியில் காணப்படுகின்றன.

இந்த ஆண்டும் பட அறிவிப்புகள்

இந்த ஆண்டும் பட அறிவிப்புகள்

இந்நிலையில் தற்போது விஜய் பிறந்தநாளையொட்டி தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வரும் 21ம் தேதி மாலை வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல விஜய் பிறந்தநாளான ஜூலை 22ம் தேதி அவரது தளபதி 67 படத்தின் அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

காமன் டிபி வெளியீடு

காமன் டிபி வெளியீடு

இந்நிலையில் நேற்றைய தினம் விஜய் பிறந்தநாளின் காமன் டிபியை அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். வரைபடமாக காணப்படும் இந்த டிபியில் விஜய்யின் வித்தயாசமான கெட்டப்புகள் காணப்படுகின்றன. விஜய்யின் 48வது பிறந்தநாளையொட்டி இந்த டிபியை வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட 48 கோலிவுட் பிரபலங்கள் வெளியிட்டனர்.

தொடர்ந்து ட்ரெண்டிங்

தொடர்ந்து ட்ரெண்டிங்

இந்நிலையில் இந்த டிபி வெளியாவதற்கு முன்பாகவும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தது. தற்போது வெளியாகி இத்தனை மணி நேரங்களை கடந்தும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. ஏராளமான விஜய் ரசிகர்கள் இதை தங்களது டிபிக்களாக மாற்றியுள்ளனர். மேலும் தொடர்ந்து இணையதளத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X