»   »  காட்ஸில்லா உருவான ஸ்டுடியோவில் விஜய் - அட்லீ படம்!

காட்ஸில்லா உருவான ஸ்டுடியோவில் விஜய் - அட்லீ படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பைரவா படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிந்துவிட்டது. அடுத்து விஜய்யின் 61வது படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டன.

முதலில் சாதாரணமாகத்தான் பூஜையை வைத்துக் கொள்ளலாம் என விஜய் கூறினாராம். ஆனால் அட்லீக்கு அடுத்த ஷங்கராகும் ஆசையை அடக்கமுடியவில்லையாம். விளைவு, நேரடியாக ஹாலிவுட்டுக்கே படை பரிவாரங்களுடன் கிளம்பப் போகிறார்.

Vijay's 61st movie to be launched at Hollywood

ஆம், விஜய்யின் 61வது படத்தின் ஆரம்ப படப்பிடிப்பே ஹாலிவுட்டில்தான். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் முதல் நாள் ஷூட்டிங் நடக்கப் போகிறதாம்.

இங்குதான் காட்ஸில்லா, ஹாரிபாட்டர், பேட்மேன் Vs சூப்பர் மேன் போன்ற படங்கள் படமாகின. இது உண்மையென்றால் இங்கு படமாகும் முதல் தமிழ் படம் விஜய்-அட்லி படம்தான்.

ஷூட்டிங் தொடங்கும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லையாம். விஜய் குடும்பத்துடன் ஒரு சின்ன ஃபாரின் ட்ரிப்பை முடித்துக் கொண்டு வந்த பிறகு 61 வது படத்தின் வேலைகள் தொடங்க உள்ளன.

English summary
Vijay - Atlee's 61st movie launch will be held in Warner Bros Studios, Los Angeles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil