'நாங்களும் வைப்போம்ல!' - விஜய்க்கு 80 அடியில் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்
சென்னை: நடிகர் விஜய்க்கு சென்னையில் 80 அடியில் கட் அவுட் வைத்து கொண்டாடினர் அவரது ரசிகர்கள்.
பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த ஜில்லா நாளை வெளியாகிறது. இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
1200 அரங்குகளில் வெளியாகும் ஜில்லாவின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தடை
படம் வெளியாகும் நேரத்தில் தியேட்டர்களின் முன்பு கட் அவுட், தோரணம், பேனர்கள் வைப்பதற்கு போலீசார் தடை விதித்ததாக விஜய் ரசிகர்கள் தரப்பில் குற்றம்சாட்டி வந்தனர்.

80 அடி கட் அவுட்
இந்த நிலையில் படத்தின் நாயகன் விஜய்க்கு மெகா சைஸ் கட் அவுட் வைத்து கொண்டாடினர் ரசிகர்கள்.
ஜில்லா வெளியாகும் அரங்குகளில் ஒன்றான பைலட் தியேட்டர் முன்பு 80 அடி உயரத்தில் பிரமாண்ட கட் அவுட் வைத்துள்ளனர் ரசிகர்கள்.

குவிந்தது மீடியா
இந்த கட் அவுட் வைக்கும் நிகழ்ச்சிக்கு மீடியாக்களை அழைத்து ஒரு விழாவாகவே நடத்திவிட்டனர் ரசிகர்கள். டிவி, இணையதளம், செய்தித் தாள்களின் நிருபர்களும் காமிராமேன்களும் குவிந்துவிட்டனர்.

பாலாபி ஷேகம்
இன்று காலை பைலட் தியேட்டர் உள்ள பகுதி முழுவதும் விஜய் ரசிகர்களாகவே காட்சி தந்தனர். கட் அவுட்டுக்கு வழக்கம்போல பாலபிஷேகம், மலரபிஷேகமும் நடத்தத் தவறவில்லை!

அஜீத்துக்கும்
சில தினங்களுக்கு முன் வீரம் படத்துக்காக அஜீத்துக்கு இதே போல பிரமாண்ட கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் நடத்தி, பேண்ட் வாத்தியத்துடன் குத்தாட்டம் போட்டனர் அஜீத் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











