தொடர்ந்து ரசிகர்களின் அன்புமழையில் அரபிக் குத்து பாடல்... 70 மில்லியனை தாண்டியது!
சென்னை : தளபதி விஜய் ஏராளமான மாஸ் படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
அவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரலில் கோடைக் கொண்டாட்டமாக வெளியாக உள்ளது.
படத்தின் அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் தொடர்ந்து பாடலின் வியூஸ் அதிகரித்த வண்ணம் உள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் அடுத்தடுத்து மாஸ் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அவர்களும் அதற்காக காத்திருந்து படங்களை கண்டு ரசித்து வருகின்றனர். தளபதி நின்றால், நடந்தால் அனைத்தையும் வைரலாக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள். மாஸ்டர் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அந்தப் படத்தை வெற்றிப்படமாக்கினார் விஜய்.

பீஸ்ட் படம்
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ஊடாகவே படத்தின் பிரமோஷன் பணிகளையும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் துவங்கியுள்ளது.

முதல் பாடல்
படத்தின் முதல் பாடல் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியாகியுள்ளது. அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் உள்ளிட்டவர்கள் இடம்பெற்ற பாடலின் பிரமோவே ரசிகர்களை கொண்டாட வைத்தது. இதையடுத்து சில தினங்களில் கடந்த காதலர் தினத்தன்று படத்தின் பாடல் வெளியானது.

சிறப்பான நடனம்
வெளியான சில மணிநேரங்களிலேயே பாடலின் வியூஸ் மில்லியன் கணக்கில் அதிகரித்தது. விஜய்யின் முந்தைய படங்களை போலவே இந்தப் படத்தின் பாடலும் ரசிர்களை கவர்ந்திருந்தது. இந்தப் பாடலுக்கு அரபிக்குத்து என்று பெயரிட்டிருந்தார் அனிருத். லிரிக் வீடியோவாக வெளியான பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் அனைவரையும் கவரும்வகையில் அமைந்திருந்தது.

70 மில்லியன் வியூஸ்
இந்நிலையில் பாடல் தற்போது 70 மில்லியன் வியூக்களை கடந்துள்ளது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்து போஸ்டரும் வெளியிட்டுள்ளது. இதேபோல 3.3 மில்லியன் லைக்ஸ்களையும் பாடல் பெற்றுள்ளது. அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இந்தப் பாடலை சிறப்பான வகையில் பாடியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











