அடுத்தடுத்த சாதனை... அரபிக்குத்து பாட்டு என்ன உயரத்துக்கு போயிருக்கு பாருங்க
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
Recommended Video
படம் வரும் ஏப்ரல் மாதத்தில் கோடை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

பீஸ்ட் படம்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் பீஸ்ட். மாஸ்டர் படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் அவர் நடித்துள்ளார். மாஸ்டர் படம் வழக்கமான ஆக்ஷன் காட்சிகளை கொண்டிருந்தாலும் வித்தியாசமான கதைக்களத்தில் விஜய்க்கு கைக்கொடுத்தது. இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் அவர் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கோடைக் கொண்டாட்டத்திற்கு ரெடி
இந்தப் படம் கோடைக் கொண்டாட்டமாக வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷனை தற்போது படக்குழு துவங்கியுள்ளது. படத்தின் முதல் பாடலை கடந்த காதலர் தினத்தில் வெளியிட்டது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள நிலையில் இசையமைத்துள்ளார் அனிருத்.

அரபிக்குத்து பாடல்
இதனிடையே அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியானது. இதையொட்டி சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் நெல்சன் மூவரும் இணைந்து வெளியிட்ட பிரமோ சிறப்பான வரவேற்பை பெற்றது. இதில் வாய்ஸ் மூலமாக விஜய்யும் இணைந்திருந்தார்.

உற்சாகத்தில் ரசிகர்கள்
நீண்ட நாட்களாக படத்தின் அப்டேட் மற்றும் பாடலுக்காக ரசிகர்கள் வெறித்தனத்துடன் காத்திருந்த நிலையில் பாடல் வெளியீடு அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதையடுத்து பாடல் வெளியான முக்கால் மணிநேரத்திலேயே மில்லியன் வியூசை பெற்றது. தொடர்ந்து பாடலை ட்ரெண்டிங்கிலேயே வைத்திருந்தனர்.

12 நாட்களில் 100 மில்லியன்
இந்நிலையில் தற்போது யூடியூபில் பாடல் வெளியாகி 12 நாட்கள் மற்றும் 16 மணிநேரங்களில் 100 மில்லியன் வியூசை பெற்றுள்ளது. அதிவிரைவில் இந்த சாதனையை இந்தப் பாடல் எட்டியுள்ளது. தென்னிந்திய மொழிப் படங்களில் இந்த சாதனையை எட்டியுள்ள முதல் பாடல் என்ற பெருமையும் இதன்மூலம் கிடைத்துள்ளது.

உலகளவில் 4வது இடம்
மேலும் உலகளவில் ட்ரெண்டிங்கில் உள்ள பாடல்களில் 4வது இடத்தையும் அரபிக்குத்து பாடல் பெற்றுள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்திருந்தார். நெல்சன் திலீப்குமாரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











