அஜித்தை அரசியலுக்கு இழுக்க பார்த்த விஜய்யின் ஜோதிடர்.. ஏகே தரப்பிலிருந்து வந்த பதில் என்ன தெரியுமா?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் விஜய். அவர் ஆட்சியமைப்பதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள்தான் உதவியாக இருந்தன. பதவியேற்ற பிறகு பல விஷயங்களை செய்துவரும் அவர்; தன்னுடைய ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி என்ற உயர் பதவியை கொடுத்திருக்கிறார். அது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அஜித்தை அரசியலுக்கு இழுத்து வருவதற்கு ரத்தன் முயற்சித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக யாருடனும் கூட்டணி வைக்காமல் மொத்தம் 233 தொகுதிகளில் போட்டியிட்டது. அவற்றில் 108 தொகுதிகளில் வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனாலும் ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்காததால் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கேட்டது. காங்கிரஸ் கட்சி திமுகவுடனான தனது பத்தாண்டு கால உறவை முறித்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு கொடுக்க; விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் மூஸ்லீம் கட்சிகளும் கூட்டணியிலிருந்து வெளியே வராமல் ஆதரவு கொடுத்தன.

Vijay s Astrologer Rathan Pandit Tried To Bring Ajith Into Politics Viral Interview Sparks Debate
Photo Credit:

முதலமைச்சர் ஜோசப் விஜய்: இதன் காரணமாக சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் விஜய். அதனையடுத்து மு.க.ஸ்டாலின், ஆசிரியர் கி.வீரமணி, உதயநிதி ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் நேற்று எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவின் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களும் விஜய்யை சந்தித்து தங்களது ஆதரவை கொடுத்தார்கள். எனவே தவெக ஆதரவு எம்.எல்.ஏக்கள் பலம் 150க்கும் மேலே செல்கிறது.

Also Read
ரவி மோகனுக்கு 'தேவி ரத்னா' விருது.. இணையத்தில் ஹாட் டாப்பிக்!
ரவி மோகனுக்கு 'தேவி ரத்னா' விருது.. இணையத்தில் ஹாட் டாப்பிக்!

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: இன்று தவெக தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடக்கவிருக்கிறது. திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ மட்டும் இன்றைய வாக்கெடுப்பில் வாக்கு செலுத்த முடியாது. பெரிய கருப்பன் தொடர்ந்திருக்கும் வழக்கினால் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. மற்றபடி ஏற்கனவே ஆதரவு கொடுத்த கட்சிகள், அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு வாக்களிப்பார்கள் என்பதால்; இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக தப்பித்துவிடும் என்றே தெரிகிறது

ஜோதிடருக்கு பதவி: இதற்கிடையே முதலமைச்சராக தனது பணிகளையும் தொடங்கி செய்துவருகிறார் விஜய். சூழல் இப்படி இருக்க தன்னுடைய ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு முதலமைச்சருக்கான சிறப்பு அதிகாரி என்ற உயர் பதவியையும் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த பலரும், எதன் அடிப்படையில் பண்டிட்டுக்கு விஜய் பதவி கொடுத்திருக்கிறார்; ஜோதிடரை அருகே வைத்துக்கொண்டு ஆட்சி செய்தால் அது நன்றாகவா இருக்கும் என கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் ரத்தன் பண்டிட் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "அஜித் ரொம்ப லக்கியான ஆள். ஆனால் அவர் வரமாட்டார் என்றே தோன்றியது. நான் உண்மையிலேயே அவரை அப்ரோச் செய்தேன். சபரீசனிடம் இருக்கும் ரத்தேஷ் என்பவர் மூலம்தான் அப்ரோச் செய்தேன். ஆனால் அஜித்துக்கு நிறைய ஆபரேஷன்கள் நடந்திருக்கின்றன. அவருக்கு இதில் ஆர்வமும் இல்லை என சொல்லிவிட்டார்கள். ஆர்வம் இல்லாதவரை சமாதானம் செய்து அழைத்து வருவது வேஸ்ட். அஜித் கடக லக்கனம். லக்கனத்தில் கேது, சந்திரன் இருப்பதால் அவர் தனிமை விரும்பியாகத்தான் இருப்பார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X