விஜய் பெர்சனல் வாழ்க்கை.. வருத்தத்தில் இருக்கும் சித்தி.. இப்படி ஓபனா போட்டு உடைச்சிட்டாங்களே
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் விஜய். அதன் காரணமாக அவரது ரசிகர்கள், தொண்டர்கள், குடும்பத்தினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதற்கிடையே தேர்தலுக்கு முன்பாக அவரது பெர்சனல் வாழ்க்கை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி; சர்ச்சையை சந்தித்த்து. இந்நிலையில் விஜய்யின் சித்தி ஷீலா தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
எஸ்.ஏ.சியின் துணையோடு சினிமாவுக்குள் வந்த விஜய்; இப்போது மக்களின் துணையோடு தமிழ்நாடு முதலமைச்சராகியிருக்கிறார். இந்தத் தேர்தலில் விஜய்யின் தவெகவால் ஒன்றுமே செய்ய முடியாது என்பது பலரது கருத்தாக இருந்தது. ஆனால் விஜய்யோ ரொம்பவே கான்ஃபிடென்ஸாகத்தான் இருந்தார். நல்லதே நடக்கும் என சொல்லிக்கொண்டே இருந்தார். கூடியிருக்கும் கூட்டத்தை உற்சாகப்படுத்ததான் ஒவ்வொரு மேடையிலும் அவர் அப்படி சொன்னதாகவும் அரசியல் களத்தில் பேச்சுக்கள் கேட்டன.

அடித்து நொறுக்கிய விஜய்: ஆனால் அனைவரது கணிப்பையும் அடித்து நொறுக்கிவிட்டார். 108 தொகுதிகளை வென்று முதலமைச்சராக பதவியேற்ற அவர்; நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வென்றுவிட்டார். எனவே இனிமேல் தவெக ஆட்சிக்கு பெரிய தொல்லை இருக்காது என்றே கருதப்படுகிறது. இதற்கிடையே தேர்தலுக்கு முன்பு விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். முக்கியமாக இன்னொரு நடிகையுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் சொல்லி பரபரப்பை கிளப்பினார்.
பெர்சனல் இமேஜ்: அவர் அப்படி சொன்னது, விஜய் - திரிஷா ஒன்றாக திருமணத்துக்கு சென்றது ஆகிய இரண்டு விவகாரங்களும் அவருக்கான பெர்சனல் இமேஜை உடைத்துவிடும் என்றே எண்ணினார்கள். ஆனால் இந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பெண்களின் வாக்குகளும் விஜய்க்கு அபரிமிதமாக உதவியிருக்கிறது என்பது ரிசல்ட்டுக்கு பின்பு தெரிய வந்தது. சங்கீதாவின் விவகாரத்தை பொறுத்தவரை கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூன் மாதத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி.
ஷீலா பேட்டி: இந்நிலையில் ஷோபாவின் தங்கையும், விஜய்யின் சித்தியுமான ஷீலா தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், "விஜய் சிறு வயதிலிருந்தே அமைதியான ஆள்தான். ரொம்பவே கஷ்டமும் பட்டிருக்கிறார். அவர் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அந்த மேடையில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் சந்தோஷத்தோடு கைகளை தட்டிக்கொண்டிருந்தேன். அவரை பார்த்து ஹாய் என்று கையை அசைத்தேன். அய்யோ இப்போ அவர் சி.எம் ஆச்சே என தோன்ற; இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்தேன். அவரும் பதிலுக்கு வைத்தார்.
பெர்சனல் வாழ்க்கை: அவரது பெர்சனல் வாழ்க்கையை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகள்தான் வந்திருக்கின்றன. ஏன் இப்படி செய்கிறார்கள்; அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் மீது பழி போடலாமா என தோன்றும். அரசியல் என்றால் இப்படித்தான் போல என நினைத்துக்கொள்வேன். எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும். அதேசமயம் அவர்கள் ஏதோ எழுதுகிறார்கள் இதை நாம் ஏன் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கடந்துவிடுவேன். அப்பப்போ டைம் பாஸுக்கு மட்டும் படிப்பேன். நானாவது பரவாயில்லை; விஜய்யின் அம்மா ஷோபா அந்த செய்திகளை எல்லாம் திரும்பிகூட பார்க்கமாட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications
