'விக்' வச்ச விஜய்... வெளியானது பைரவா புது ஸ்டில்கள்! #Bairava
விக் (செயற்கை தலைமுடி) வைப்பதை விரும்பாத நடிகர்களில் முக்கியமானவர் விஜய். அதனால்தான் அவரது பெரும்பாலான படங்களில் தோற்ற மாறுதல் என்பதே இருக்காது. அரிதாக ஓரிரு படங்களில் கொஞ்சமே கொஞ்ச நேரம் விக் வைத்தோ, புதிய கெட்டப்பிலோ தோன்றுவார்.
ஆனால் காலம், அவரை ஒரு முழுப் படத்துக்கும் விக் வைத்து நடிக்கும்படி செய்துவிட்டது.

ஆம்... பைரவா படத்தில் முழுக்க விக் வைத்துதான் நடித்திருக்கிறார் விஜய். அது அவருக்கு அத்தனை கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறதா என்பதை ரசிகர்களும் வாசகர்களும்தான் சொல்ல வேண்டும்.

பைரவா படத்தில் விஜய்யின் முதல் தோற்றப் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியானது. இப்போது படத்தின் சில ஸ்டில்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஸ்டில்கள் வெளியானதுமே பைரவா படத் தலைப்பு சென்னை ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பைரவா படத்தை பரதன் இயக்குகிறார். விஜய்க்கு இந்தப் படத்தில் ஜோடி கீர்த்தி சுரேஷ்.


Click it and Unblock the Notifications