வேற வெலல் அப்டேட்...அரபிக் குத்து ரெடி...பிப்ரவரி 14ல் பீஸ்ட் பஸ்ட் சிங்கிள்

சென்னை : விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதியை புதிய அப்டேட்டாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. டாக்டர் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளுக்கு வெளியிட்டதை போல் மற்றொரு கலகலப்பான ப்ரோமோவை வெளியிட்டுள்ளார்கள்.

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 வது படமாக உருவாகி உள்ள பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் டைட்டிலுடன் ஜுலை மாதம் வெளியிடப்பட்டன.

லீக்கான ஷுட்டிங் வீடியோ

லீக்கான ஷுட்டிங் வீடியோ

அதற்கு பிறகு ஜார்ஜியா, டில்லி உள்ளிட்ட பல பகுதிகளில் பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. சென்னையில் பிம்மாண்ட ஷாப்பிங் மால் போல் செட் அமைக்கப்பட்டு, முக்கிய சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டன. இதன் வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி செம பரபரப்பாகின. அதன் பிறகு பீஸ்ட் படம் பற்றிய அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்பட்டன.

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

பீஸ்ட் படத்தின் 100 வது நாள் ஷுட்டிங் போட்டோ வெளியானதில் இருந்தே படம் பற்றி அப்டேட் கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள். ஆனால் எந்த அப்டேட்டும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாக தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் சமயங்களில் சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவின. ஆனால் அப்படி எதுவும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் விடாமல் அப்டேட் கேட்டு #BeastUpdate ஹேஷ்டேக்கை ரசிகர்கள் அவ்வப்போது டிரெண்டிங் ஆக்கி வந்தனர்.

வெளியான தகவல்

வெளியான தகவல்

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்து விட்டதாகவும், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. ஏப்ரல் 14ம் தேதி பீஸ்ட் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக விக்கிபீடியா உள்ளிட்டவற்றில் குறிப்பிடப்பட்டது. இந்த படத்தில் செல்வராகவன் வில்லன் இல்லை. அரசியல்வாதி ரோலில் நடித்துள்ளதாகவும் கூறினார்கள்.

பீஸ்ட் அப்டேட் அறிவிப்பு

பீஸ்ட் அப்டேட் அறிவிப்பு

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் அப்டேட் வெளியிடப்பட உள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை அறிவித்தது. இருட்டில் விஜய் இருப்பது போலவும், நீண்ட துப்பாக்கி வந்து ரோல் ஆகி Beast mode on என குறிப்பிட்டு, இன்று மாலை அப்டேட் என காட்டும் வீடியோ ஒன்றையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது. அந்த துப்பாக்கியின் மீது 65% என காட்டப்பட்டு, கீழே பீஸ்ட் அப்டேட் என குறிப்பிடப்பட்டிருந்தது. அது என்ன 65 சதவீதம் லோடிங் என ரசிகர்கள் கேட்க துவங்கினர்.

கலகலப்பான ப்ரோமோ வீடியோ

கலகலப்பான ப்ரோமோ வீடியோ

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதியை அப்டேட்டாக கலகலப்பான வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர். டாக்டர் படத்திற்கு வெளியிட்டதை போல் அனிருத், நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன் பாடல் பற்றி பேசிக் கொண்டிருப்பது போன்று ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அரபிக்குத்து என இந்த ஃபஸ்ட் சிங்கிளிற்கு பெயர் வைத்துள்ளனர். இந்த கலகலப்பான டிஸ்கஷனில், பாடல் எப்படி இருக்கும் என விஜய்க்கு போன் செய்து கேட்கிறார் அனிருத். அரபிக்குத்து என்ற பெயரை கேட்டதும் நெல்சனையும் அனிருத்தையும் வச்சு செய்து, கலாய்க்கிறார் விஜய். இந்த காமெடியான ப்ரோமோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதுதான் பீஸ்ட் அப்டேட்

இதுதான் பீஸ்ட் அப்டேட்

காதலர் தின ஸ்பெஷலாக அரபிக்குத்து பாடல் பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளாக பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் கேட்பதை போலவே, என்னய்யா புதுசு புதுசா கண்டுபிடிக்கிறீங்க...அது என்னய்யா அரபிக்குத்து என கேட்டு கலாய்த்து சிரித்து வருகின்றனர். ப்ரோமோவே வேற லெவல் கலகலப்பாக இருக்கே...இன்னும் முழு பாடலும் எப்படி இருக்கும். சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடி இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X