விஜய்யின் ‘பீஸ்ட்’ படம்... ஆடியோ வெளியீட்டுக்கு ரெடியா...எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை : விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது பீஸ்ட் படம்.
இந்தப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி விரைவில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.எந்த தேதியில் நடக்க உள்ளது தெரியுமா?

விஜய்யின் பீஸ்ட் படம்
நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். முன்னணி இயக்குநர்கள் மட்டுமின்றி இளம் இயக்குநர்களுக்கும் அவர் தற்போது வாய்ப்பு தந்து வருகிறார். விஜய் படம் என்றாலே பட்டையை கிளப்பும் என்ற நிலையில், இந்த இயக்குநர்கள் விஜய்யின் பெஸ்ட்டை கொடுத்து வருகிறார்கள்.

சிறப்பான அரபிக்குத்து பாடல்
பீஸ்ட் படத்தின் சூட்டிங், டப்பிங் பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியாகி யூடியூபில் 150 மில்லியன் வியூஸ்களை கடந்து ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரபலங்களும் கொண்டாட்டம்
பிரபலங்களும் இந்தப் பாடலை மிகுதியாக கொண்டாடி வருகின்றனர். தினந்தோறும் பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்டு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் சமந்தா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

கோடை கொண்டாட்டம்
இந்தப் படம் கோடை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வரும் ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இதையொட்டி தற்போது படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு படக்குழு தயாராகி வருகிறது.

20ம் தேதி ஆடியோ வெளியீடு?
வரும் 20ம் தேதி படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீடு நேரு ஸ்டேடியம் அல்லது சாய் ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் போஸ்டருடன் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications