அடுத்த கட்டத்தில் தளபதியின் பீஸ்ட்... இசை வெளியீடு இந்த தேதியிலா... வெயிட் பண்ணுவோம்!
சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட்.
இந்தப் படத்தின் முதல் லிரிக் வீடியோ பாடல் வெளியாகி 20 நாட்களில் 125 மில்லியன் வியூக்களை எட்டியுள்ளது.
படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் படம்
தளபதி விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு தமிழ் சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி உலகளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வெளியான சிறப்பு புகைப்படம்
இந்தப் படத்திற்காக சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. 100வது நாள் சூட்டிங்கை முடித்த நிலையில் புகைப்படம் ஒன்றை நெல்சன் வெளியிட்டிருந்தார். அதில் டிரம்ஸ் வாசிக்கும்படியாக விஜய்யை பார்த்த ரசிகர்கள் படம் மியூசிக் சம்பந்தமான படமா என்ற கோணத்தில் யோசித்தனர்.

முதல் பாடல் வெளியீடு
படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தையொட்டி படத்தின் முதல் பாடல் வெளியானது. அரபிக்குத்து என்று இந்தப் பாடலுக்கு படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பெயரிட்டிருந்தார். சிவகார்த்திகேயன் வரிகளில் பாடல் வெளியானது.

125 மில்லியன் வியூஸ்
இதையொட்டி வெளியான ப்ரோமோவும் வரவேற்பை பெற்றது. பாடலும் கடந்த 20 நாட்களில் 125 மில்லியன் வியூஸ்களை பெற்று அதிரடியை ஏற்படுத்தியுள்ளது. படம் வரும் ஏப்ரல் 14ல் புத்தாண்டு மற்றும் கோடைக் கொண்டாட்டமாக வெளியாக உள்ளது. இதனிடையே படத்தின் இசை வெளியீடு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மார்ச் 20ம் தேதி இசை வெளியீடு?
வரும் 20ம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமான வகையில் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்போதும் விஜய் படத்தின் ஒவ்வொரு நிகழ்வும் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் ஆர்வம்
கடந்த மாஸ்டர், புலி உள்ளிட்ட படங்களின் ஆடியோ வெளியீடும் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. குறிப்பாக இந்த நிகழ்ச்சிகளில் விஜய்யின் பேச்சு அனைவரையும் கவரும் விஷயமாக உள்ளது. விஜய் அரசியல் விஷயங்கள் குறித்து ஏதாவது சொல்வாரா என்றும் அரசியல் தலைவர்கள் அவரது பேச்சை கூர்ந்து கவனிப்பார்கள். அந்த வகையில் பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீடும் கவனம் பெற்றுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











