கேஜிஎப்2 படத்தை பீட் செய்த விஜய்யின் பீஸ்ட்... எதுலன்னு பாருங்க!

சென்னை : நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் நேற்றைய தினம் வெளியான நிலையில் தொடர்ந்து ட்விட்டர், யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. தொடர்ந்து ட்ரெயிலரின் வியூஸ் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களின் ட்ரெயிலரை பீட் செய்து வருகிறது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தமிழில் மட்டுமின்றி இன்டர்நேஷனல் அளவில் மிகச்சிறந்த ஹீரோவாக இருந்து வருகிறார். அவர் தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நிலையில் மாஸ்டர் படத்திற்கு பிறகு தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.

வீரராகவன் கேரக்டர்

வீரராகவன் கேரக்டர்

படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய், ரா ஏஜெண்டாக வீர ராகவன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். நேற்றைய தினம் வெளியான படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்திற்காக தற்போது முதலே அவர்கள் காத்திருக்கின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த ட்ரெயிலர்

ரசிகர்களை கவர்ந்த ட்ரெயிலர்

இந்த ட்ரெயிலருக்காக ரசிகர்கள் தொடர்ந்து காத்திருந்த நிலையில், அவர்களை ட்ரெயிலர் வெகுவாக கவர்ந்துள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் விஜய்யின் மாஸ் வெளியாகியுள்ளது. வரும் 13ம் தேதி சர்வதேச அளவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

மற்ற மொழிகளிலும் ரசிகர்கள்

மற்ற மொழிகளிலும் ரசிகர்கள்

விஜய்க்கு தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். நேற்றைய தினம் ட்ரெயிலர் வெளியான நிலையில் பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் ரசிகர்களின் உற்சாக கொண்டாட்டத்தை பார்க்க முடிந்தது.

 கேஜிஎப் 2 படம் ரிலீஸ்

கேஜிஎப் 2 படம் ரிலீஸ்

பீஸ்ட் படத்துடன் இணைந்து நடிகர் யாஷ், சஞ்சய் தத் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎப் சாப்டர் 2 படமும் வரும் 14ம் தேதி தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் முதல்பாகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில், தற்போது விஜய் படத்துடன் இணைந்து இந்தப படம் வெளியாகவுள்ளது பீஸ்ட் படத்தின் வசூலை பாதிக்குமா என்று பேசப்பட்டு வருகிறது.

பீஸ்ட் படத்தை பார்க்க ஆர்வம் அதிகரிப்பு

பீஸ்ட் படத்தை பார்க்க ஆர்வம் அதிகரிப்பு

இந்நிலையில் தற்போது கேஜிஎப் 2 படத்தை காட்டிலும் விஜய் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தெரியவந்துள்ளது. ஐஎம்டிபி வலைதளத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இந்திய சினிமாவில் கேஜிஎப்2 படத்தை காட்டிலும் பீஸ்ட் படம் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஜிஎப் 2 படத்தை முந்திய பீஸ்ட்

கேஜிஎப் 2 படத்தை முந்திய பீஸ்ட்

முன்னதாக கேஜிஎப் 2 படத்தின் ட்ரெயிலர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் தற்போது காட்சியையே மாற்றியுள்ளது. ஐஎம்டிபி டேட்டாவின்படி, ரசிகர்களிடையே பீஸ்ட் படத்தை பார்க்கும் ஆர்வம் 40.3 சதவிகிதமாக உள்ளது.

Recommended Video

திருநெல்வேலி: 'பீஸ்ட்' ட்ரைலர் பார்த்த குஷியில்... தியேட்டரில் சீட்டுக்களை உடைத்த விஜய் ரசிகர்கள்!
2வது இடத்தில் கேஜிஎப்2

2வது இடத்தில் கேஜிஎப்2

இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் 31.7 சதவிகிதத்துடன் கேஜிஎப் 2 படம் உள்ளது. ரன்வே34 படம் 5.6 சதவகிதத்துடன் 3வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் விக்ரமின் கோப்ரா படம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பட்டியலில் 2.6 சதவிகிதத்துடன் 8வது இடத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X