25வது நாளை எட்டிய பீஸ்ட் படம்... இந்திய அளவில் வசூல் சாதனை செய்த விஜய்!

சென்னை :நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த 13ம் தேதி கோடைக் கொண்டாட்டமாக வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் 200 கோடி ரூபாய் கிளப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பே எட்டியுள்ளது. தற்போது 25வது நாளையும் படம் எட்டியுள்ளது.

விஜய்யின் பீஸ்ட்

விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 13ம் தேதி கோடை கொண்டாட்டமாக வெளியானது பீஸ்ட். இந்தப் படத்தின் விமர்சனங்கள் கலவையாக அமைந்தது. ஆனாலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள்.

சக்சஸ் பார்ட்டி

சக்சஸ் பார்ட்டி

தொடர்ந்து படத்தின் சக்சஸ் பார்ட்டியை படக்குழுவினருடன் இணைந்து விஜய் கொண்டாடினார். விஜய்யின் வீட்டில் இந்த பார்ட்டி நடத்தப்பட்டது. மிகவும் யூத்புல்லாக அந்த பார்ட்டியும் அதில் இணைந்த டீமும் காணப்பட்டது. இந்த பார்ட்டியின் புகைப்படத்தை இயக்குநர் நெல்சன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அபர்ணா தாஸ் வீடியோ

அபர்ணா தாஸ் வீடியோ

படத்தில் நடித்திருந்த அபர்ணா தாசும் தனது ட்விட்டர் பக்கத்தில் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். மேலும் நேற்றைய தினம் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட தனது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவையும் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவும் மிகவும் வைரலானது.

வெற்றிகரமான 25வது நாள்

வெற்றிகரமான 25வது நாள்

தற்போது படம் ரிலீசாகி 25வது நாளை எட்டியுள்ளது. படம் குறித்த நெகட்டிவ் விளம்பரங்கள், கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் போட்டி உள்ளிட்டவற்றை தாண்டி தற்போது படம் இந்த கட்டத்தை எட்டியுள்ளது. இதேபோல படம் தற்போது 250 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.

வசூல்சாதனை செய்த 5வது படம்

வசூல்சாதனை செய்த 5வது படம்

இந்த சாதனையை தொடர்ந்து தனது 5வது படத்தில் விஜய் எட்டியுள்ளார். மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர் படங்களை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்திலும் 250 கோடி ரூபாய் வசூலை விஜய்யின் படம் தாண்டியுள்ளது. இதுபோல தொடர்ந்து 5 படங்களில் 250 கோடி ரூபாய் வசூலை தாண்டிய ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையும் விஜய்க்கு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X