யூடியூபை தெறிக்கவிடும் விஜய்யின் அரபிக்குத்து பாடல்... எவ்ளோ வியூஸ் பாருங்க!
சென்னை : நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு அடுத்ததாக தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் ஏப்ரலில் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான படத்தின் முதல் பாடல் யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.
Recommended Video

தளபதி விஜய்
தளபதி என்று ரசிகர்களால் செல்லம் கொஞ்சப்படுபவர் நடிகர் விஜய். இவர் கடந்து வந்தது கரடுமுரடான பாதை என்றாலும் அதையெல்லாம் தனக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொண்டார். தற்போது சிறப்பான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

மாஸ்டர் விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னதாக இவர் நடித்திருந்த மாஸ்டர் படத்தில் வித்தியாசமான வாத்தியாராக இவர் நடித்திருந்தார். படத்தில் இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான காட்சிகள் அனைத்தும் மிரட்டலாக அமைந்திருந்தது. வசூலில் இந்தப் படம் பெரிய வெற்றியை பெற்றது.

ரிலீசுக்கு தயாராகும் பீஸ்ட்
இந்நிலையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். படத்தின் டப்பிங் உள்ளிட்ட பணிகளும் நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரலில் கோடை மற்றும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலர் தினத்தில் வெளியான பாடல்
தனது படங்களில் சின்ன சின்ன விஷயத்தைகூட சிறப்பான தினங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் விஜய். அந்தவகையில் கடந்த மாதம் காதலர் தினத்தையொட்டி பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடினர். அனிருத் இசையில் பாடல் அரபிக்குத்து என்ற பெயரில் வெளியானது.

17 கோடி வியூஸ்
பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இதற்காக நடிகர் விஜய் தன்னை வெகுவாக பாராட்டியதாக அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். பாடல் வெளியாகி தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், பாடல் யூடியூப் பக்கத்தில் 17 கோடி வியூசை தாண்டியுள்ளது.

பிரபலங்களும் கொண்டாடும் பாடல்
அதேபோல மிக விரைவாக 4 மில்லியன் லைக்ஸ்களை கடந்த பாடல் என்ற பெருமையும் இந்தப் பாடலுக்கு கிடைத்துள்ளது. இந்தப் பாடலை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பாடலுக்கு நடனம்
அந்த வகையில் சமந்தா, ராஷ்மிகா, டிடி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடி தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்திய அளவில் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இந்தப் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











