இணையத்தை தெறிக்கவிடும் விஜய் பாடல்... 45 நிமிடங்களில் 1 மில்லியன் வியூஸ்!

சென்னை : தளபதி விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ளது பீஸ்ட்.

இன்றைய தினம் படத்தின் முதல் பாடலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

அனிருத் இசையில் பாடலை எழுதியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தளபதி விஜய்யின் பீஸ்ட்

தளபதி விஜய்யின் பீஸ்ட்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் கிராண்ட் சக்சசை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டிரம்ஸ் வாசித்த விஜய்

டிரம்ஸ் வாசித்த விஜய்

படத்தில் விஜய், பூஜா ஹெக்டேவுடன், செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் 100வது நாள் சூட்டிங்கையடுத்து நெல்சன் வெளியிட்ட புகைப்படத்தில் விஜய் டிரம்ஸ் இசையமைப்பது போல காணப்பட்டது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

புகைப்படத்தில் இடம்பெற்ற மற்றவர்களும் பாடல் பாடுவது மற்றும் மற்ற இசைக்கருவிகளை இசைப்பது என்று காணப்பட்டனர். இதையடுத்து படத்தின் எதிர்பார்ப்பு எகிறியது. தொடர்ந்து ரசிகர்களை எதிர்பார்ப்புடன் வைத்திருந்தது படக்குழு. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில் இசையமைத்துள்ளார் அனிருத்.

முதல் பாடல் வெளியீடு

படத்தின் முதல் பாடலை வெளியிட கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் முதல் பாடலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அரபிக்குத்து என்று இநத்ப் பாடலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட பிரமோவில் பிரபலப்படுத்தியது படக்குழு.

பாடலை எழுதிய சிவகார்த்திகேயன்

பாடலை எழுதிய சிவகார்த்திகேயன்

பிரமோவே ரசிகர்களிடையே அதிகமான லைக்சையும் வியூசையும் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது காதலர் தினத்தையொட்டி இன்று மாலை 6 மணிக்கு படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

சில நிமிடங்களில் மில்லியன் வியூஸ்

சில நிமிடங்களில் மில்லியன் வியூஸ்

பாடல் வெளியிடப்பட்டுள்ள 45 நிமிடங்களிலேயே பாடல் 10 லட்சம் வியூசையும் 7.7 லட்சம் லைக்சையும் பெற்று சாதனை புரிந்துள்ளது. இதையடுத்து முதல் 45 நிமிடங்களில் அதிக வியூஸ்களை பெற்ற லிரிக்ஸ் வீடியோ பாடல்களில் முதல் 5 இடத்தை இந்தப் பாடல் பிடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X