5 நாட்களில் 200 கோடி கிளப்பில் இணைந்த பீஸ்ட்... கோலிவுட்டின் 11வது படம்

சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த 13ம் தேதி ரிலீசான படம் பீஸ்ட். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்மழையை வாரி இறைத்து வருகிறது. உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் சிறப்பாக காணப்படுகிறது. கோலிவுட்டில் வசூலை அள்ளிய படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Recommended Video

Beast VS KGF 2 | Box Office Collection | Oneindia Tamil

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 13ம் தேதி ரிலீசானது பீஸ்ட். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த நிலையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

மாஸ் ஹீரோ விஜய்

மாஸ் ஹீரோ விஜய்

குறிப்பாக மாஸ் ஹீரோவான விஜய்யை நெல்சன் வீணடித்துள்ளதாக நெகட்டிவான விமர்சனங்களை பெற்றிருந்தார். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான இந்தப் படம் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. ஆயினும் படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

ரூ 200 கோடி கலெக்ஷன்

ரூ 200 கோடி கலெக்ஷன்

கடந்த 5 நாட்களில் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 200 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டியுள்ளது. இந்த சாதனையை புரிந்த 5வது படமாக பீஸ்ட் உள்ளது. முன்னதாக மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர் போன்ற படங்கள் 200 கோடி கிளப்பில் சேர்ந்திருந்த நிலையில், தற்போது இந்த லிஸ்ட்டில் பீஸ்ட் இணைந்துள்ளது.

ரூ.200 கோடி வசூலித்த 11வது படம்

ரூ.200 கோடி வசூலித்த 11வது படம்

மேலும் 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த கோலிவுட்டின் 11வது படம் என்ற சாதனையையும் பீஸ்ட் அடைந்துள்ளது. முன்னதாக சூப்பர்ஸ்டாரின் எந்திரன், 2.ஓ, கபாலி, பேட்ட, தர்பார் படங்களும் விக்ரமின் ஐ படமும் இந்த சாதனையை எட்டியிருந்தது. இதனிடையே இந்த லிஸ்ட்டில் இணைந்து விஜய் என்றுமே மாஸ்தான் என்பதை பீஸ்ட் நிரூபித்துள்ளது.

மாஸ்டர் படம் சாதனை

மாஸ்டர் படம் சாதனை

லாக் டவுனிலும் கடந்த ஆண்டில் வெளியான மாஸ்டர் படம் 200 கோடி ரூபாய் வசூலை உலகளவில் தாண்டி சாதனை படைத்தது. மேலும் கடந்த ஆண்டில் கோலிவுட்டில் அதிக வசூலை எட்டிய படம் என்ற சிறப்பையும் மாஸ்டர் படம் பெற்றது. தற்போது அந்த சாதனையை பீஸ்ட் முறியடித்துள்ளது. இதன்மூலம் தன்னுடைய படத்தின் சாதனையை தானே பீட் செய்துள்ளார் விஜய்.

இந்தியாவில் ரூ.135 கோடி வசூல்

இந்தியாவில் ரூ.135 கோடி வசூல்

இந்தியாவில் மட்டுமே கடந்த 5 நாட்களில் பீஸ்ட் 135 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. இதனிடையே, பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கடந்த 5 நாட்களில் பீஸ்ட் சிறப்பான வசூலை அடைந்து வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், பாசிட்டிவ் கமெண்ட்களை வாங்கவும் பீஸ்ட் தவறவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X