போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஓவர்... பீஸ்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது வருது தெரியுமா?
சென்னை : கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகம் கேட்டு வரும் ஒரே கேள்வி, பீஸ்ட் ரிலீஸ் தேதி என்ன என்பது தான். ஆனால் சன் பிக்சர்ஸ் இதுவரை அது பற்றி எதுவும் சொல்லவில்லை. இதனால் என்ன நடக்கிறது என புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை டைட்டிலுடன் வெளியிட்டனர். அதற்கு பிறகு இந்த ஆண்டு காதலர் தின ஸ்பெஷலாக ஃபஸ்ட் சிங்கிளான அரபிக்குத்து பாடலை வெளியிட்டனர். அது பாடல் இதுவரை 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று யூட்யூப்பை கலக்கி வருகிறது.

தாறுமாறு ஹிட்
அரபிக்குத்து பாடல் செம ஹிட்டானதால் அடுத்து டீசர் வெளியாகும், ரிலீஸ் தேதி வரும், ஆடியோ வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. ஆடியோ வெளியீட்டு விழா இல்லை என்ற தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் பயங்கர அப்செட் ஆனதால் அவர்களை குஷிப்படுத்த சமீபத்தில் செகண்ட் சிங்கிளாக ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியிடப்பட்டது. குட்டி ஸ்டோரி பாடலை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் ஜாலியோ ஜிம்கானா பாடலும் செம ஹிட்டாகி வருகிறது.

தாமதத்திற்கு இதுதான் காரணமா
ஆடியோ வெளியீட்டு விழா இல்லை, ரிலீஸ் தேதி அறிவிப்பில் தாமதம் ஆகியவற்றிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. இதை வைத்து வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் ரிலீஸ் தேதி அறிவிப்பு தாமதத்திற்கு காரணம் சன் பிக்சர்ஸ் கிடையாதாம். பீஸ்ட் சென்சார் க்ளியரன்ஸ் இன்னும் கிடைக்காதது தான் ரிலீஸ் தேதி அறிவிப்பு தாமதமாவதற்கு காரணமாம்.

எப்போ பீஸ்ட் ரிலீஸ் அறிவிப்பு
பீஸ்ட் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவதும் முடிந்து விட்டதாம். இன்று அல்லது நாளை சென்சார் க்ளியரன்ஸ் கிடைத்து விடுமாம். பெரும்பாலும் பீஸ்ட் படத்திற்கு யு/ஏ சான்று கிடைக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சென்சார் ஒப்புதல் கிடைத்ததும் இந்த வாரத்திற்குள் பீஸ்ட் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாம்.
Recommended Video

செம ட்ரீட் காத்திருக்கு
ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பதிலாக நேரடியாக ப்ரொமோஷன் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாம். ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சை கேட்க ஆர்வமாக காத்திருந்த ரசிகர்களின் ஆசை, ப்ரமோஷன் விழாவில் நிறைவேற உள்ளதாம். ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வார் என்பதால் அவர் என்ன பேச போகிறார் என்பதை கேட்க ரசிகர்கள் இப்போதே ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











