முடிந்தது பீஸ்ட் படத்தின் சூட்டிங்... அடுத்தது என்ன பாடல் வெளியீடுதான்!
சென்னை : மாஸ்டர் படத்தின் அதிரி புதிரி வெற்றியை அடுத்து தற்போது நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
படம் ஏப்ரலில் கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கை படக்குழு தற்போது முடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் எப்போதுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக காணப்படுகிறார். அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது படங்களுக்காக ரசிகர்கள் எப்போதுமே காத்திருக்கின்றனர். படத்தின் அப்டேட்களுக்காகவும் அவர் காத்திருக்கும் சூழல் தொடர்ந்து காணப்படுகிறது.

மாஸ்டர் படம்
விஜய்யின் மாஸ்டர் படம் கடந்த ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. பாக்ஸ் ஆபீசிலும் அதிக வசூலை பெற்றது. படத்தில் வித்தியாசமான விஜய்யை பார்க்க முடிந்தது. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் நடைபெறும் பிரச்சினைகளை சரிசெய்யும் வாத்தியாராக அவர் நடித்திருந்தார்.

பீஸ்ட் படம்
இந்நிலையில் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு அவர் விடுமுறை கொண்டாட்டத்திற்காக வெளிநாடு சென்றார்.

சூட்டிங் நிறைவு
ஆயினும் மற்ற நடிகர்கள் நடிக்க வேண்டிய போர்ஷன்கள் மீதம் இருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நடந்து முடிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் ஜெய்ப்பூரில் நடைபெற்று முடிந்துள்ளது.

கோடை கொண்டாட்டம்
சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் படம் வரும் ஏப்ரலில் கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஜரூராக நடைபெறவுள்ளது.

பாடல் வெளியீடு
மேலும் படத்தின் பிரமோஷன் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்கட்டமாக படத்தின் பாடல் வெளியாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பாடலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











