படம் ரிலீசாகியும் சாதனைகளை தொடரும் அரபிக்குத்து பாடல்... இப்ப என்னன்னு பாருங்க!

சென்னை :நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 13ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியான படம் பீஸ்ட். இந்தப் படத்தின் விமர்சனங்கள் கலவையாக அமைந்த போதிலும் படம் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 13ம் தேதி கோடை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரிலீசானது பீஸ்ட் படம். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தப் படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியானது.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் அந்த வகையில் பூர்த்தி செய்யவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் 200 கோடி ரூபாய் வசூலை சர்வதேச பாக்ஸ் ஆபீசில் பெற்றுள்ளது.

சிறப்பான பாடல்கள்

சிறப்பான பாடல்கள்

முன்னதாக படத்தின் பாடல்கள், ட்ரெயிலர், தீம் பாடல், ப்ரமோக்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டு ரசிகர்களின் நாடித் துடிப்பை எகிற வைத்தது. பாடல்கள் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. தொடர்ந்து தற்போது வரை பாடல்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

பிரபலங்கள் வீடியோக்கள்

பிரபலங்கள் வீடியோக்கள்

கோடிக்கணக்கான வியூஸ், லைக்ஸ்களை இந்தப் பாடல்கள் தொடர்ந்து பெற்று வருகின்றன. குறிப்பாக அரபிக்குத்து பாடல் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடலை பல பிரபலங்கள் ஆடி அதை யூடியூப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வீடியோக்கள் தனியாக வரவேற்பை பெற்று வருகின்றன.

Recommended Video

Beast | Vijayயின் தந்தை S.A.Chandrasekarரின் Open talk | அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
325 மில்லியன் பார்வையாளர்கள்

325 மில்லியன் பார்வையாளர்கள்

இந்நிலையில் தற்போது அரபிக்குத்து பாடல் தனியாக மேலும் ஒரு சாதனையை புரிந்துள்ளது. 6 மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ள இந்தப் பாடல் யூடியூபில் தற்போது 325 மில்லியன் பார்வையாளர்களை அதிவேகமாக கடந்து இந்த சாதனையை செய்யும் முதல் தென்னிந்திய வீடியோ என்ற பெருமையை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X