விடாது தொடரும் அரபிக்குத்து பாடலின் சாதனை.. விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்த தொடர்ந்து கங்கணம்!
சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13ல் கோடைக் கொண்டாட்டமாக வெளியானது பீஸ்ட் படம்.
இந்தப் படம் எதிர்பார்த்த மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது.
ஆயினும் படம் சிறப்பான வசூலை பெற்றது. விஜய் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி கோடை மற்றும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரிலீசானது பீஸ்ட் படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு மிகச் சிறப்பான பிரமோஷன்கள் கொடுக்கப்பட்டன.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் படத்தை எதிர்கொண்டனர். அனிருத் இசையில் பாடல்கள் முன்னதாக வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. முன்னதாக வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலிலோ ஜிம்கானா லிரிக் வீடியோ பாடல்கள் மிகவும் சிறப்பாக காணப்பட்டன.

சிறப்பான பாடல்கள்
இந்தப் பாடல்களும் தங்களின் பங்கிற்கு படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தன. இந்நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து நெல்சன் திலீப்குமாரை ரசிகர்கள் அதிகமாக ட்ரோல் செய்தனர். படத்தில் லாஜிக் இல்லாத காட்சிகளை அவர் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன.

அரபிக்குத்து வீடியோ பாடல்
இந்நிலையில் படம் வெளியான சில தினங்களில் படத்தின் அரபிக்குத்து பாடலின் வீடியோவும் வெளியானது. இந்நிலையில் இந்த வீடியோ பாடல் தற்போது 10 கோடி வியூஸ்களை தாண்டி சாதனை செய்துள்ளது. விஜய்யின் படம் மட்டுமல்ல பாடலும் ரசிகர்களுக்கு மாஸ்தான் என்பதை இந்தப் பாடல் தற்போது நிரூபித்துள்ளது.

37 நாட்களில் சாதனை
வெறும் 37 நாட்களில் இந்த சாதனையை தற்போது இந்தப் பாடல் பெற்றுள்ளது. முன்னதாக இந்தப் பாடலின் லிரிக் வீடியோ 12 நாட்களில் இந்த சாதனையை எட்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது லிரிக் வீடியோ பாடல் 43.3 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது.
Recommended Video

வரவேற்றை பெற்ற பாடல்கள்
படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அனிருத் இசையில் அரபிக்குத்து, ஜாலிலோ ஜிம்கானா பாடல்கள் ரசிகர்களை கொண்டாட வைத்தது. மேலும் தீம் மியூசிக்கும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது. ஆயினும் படம் வசூலில் சாதனை படைத்தது. தங்களுடைய ஹீரோவின் படத்தை எந்தவகையிலும் தோற்க விடமாட்டோம் என்று விஜய் ரசிகர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு படத்தை வசூல்ரீதியாக வெற்றிப்படமாக்கினர்.


Click it and Unblock the Notifications











