அதிக விலைக்கு விற்கப்பட்ட பீஸ்ட் படத்தின் தெலுங்கு திரையரங்க உரிமை... சூப்பர்தான்!

சென்னை :நடிகர் விஜய் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் சிறப்பான நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் தற்போது சென்சார் முடிந்து ஏப்ரல் 13ல் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் வெளிநாட்டு உரிமை விற்று தீர்ந்துள்ளது.

நடிகர் விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய் தமிழகத்தில் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகராக காணப்படுகிறார். இவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்த நிலையில், அடுத்ததாக பீஸ்ட் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

யூஏ சான்றிதழ்

யூஏ சான்றிதழ்

இந்தப் படத்தின் சென்சார் முடிக்கப்பட்டு யூஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே.

ஹிட்டடித்த பாடல்கள்

ஹிட்டடித்த பாடல்கள்

அனிருத் இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி இணையதளத்தையே அதிர வைத்துள்ளது. இரண்டு பாடல்களிலும் விஜய்யின் உற்சாகமான நடனத்தை பார்த்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே விஜய் மற்றும் பீஸ்ட் காணப்படுகிறது.

அதிகரிக்கும் மார்க்கெட் வேல்யூ

அதிகரிக்கும் மார்க்கெட் வேல்யூ

படத்திற்கு படம் விஜய்யின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே பீஸ்ட் படத்தின் வெளிநாட்டு திரையரங்கு விநியோக உரிமை சுமார் 38 கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது. விஜய் படங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் இது என்ற பெருமையும் பீஸ்டிற்கு கிடைத்துள்ளது.

தெலுங்கு திரையரங்க உரிமை

தெலுங்கு திரையரங்க உரிமை

இதனிடையே தற்போது படத்தின் தெலுங்கு திரையரங்க உரிமையும் விற்றுத் தீர்ந்துள்ளது. தில் ராஜூ மற்றும் ஏசியன் சுனீல் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து படத்தின் தெலுங்கு மாநிலங்களின் திரையரங்கு உரிமையை கைப்பற்றியுள்ளனர். 11 கோடி ரூபாய்க்கு படம் விற்கப்பட்டுள்ளது

ரசிகர்கள் காத்திருப்பு

ரசிகர்கள் காத்திருப்பு

கேஜிஎப் 2 படத்துடன் பீஸ்ட் போட்டியிட உள்ள நிலையிலும் தெலுங்கில் 11 கோடி ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கேரள, கர்நாடக திரையரங்க உரிமைகளின் விவரங்களும் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் வெறித்தனத்துடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X