சாங் ரிலீஸ் பண்ணலாமா... அனிருத் தாறுமாறு கேள்வி... பீஸ்ட் 3வது பாடல் குறித்த அப்டேட்!

சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே கூட்டணியில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ளன. ஏற்கனவே படத்தின் 2 பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளன. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடல் குறித்து படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அப்டேட் வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் பீஸ்ட்

விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் வரும் 13ம் தேதி ரிலீசாக உள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்திற்காக பல பிரமோஷன்களை தயாரிப்புத் தரப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அடுத்தடுத்த பாடல்கள்

அடுத்தடுத்த பாடல்கள்

படத்தின் அரபிக்குத்து மற்றும் ஜாலிலோ ஜிம்கானா பாடல்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளன. இரண்டு பாடல்களும் கோடிக்கணக்கான வியூஸ்களையும் ஏராளமான லைக்ஸ்களையும் பெற்று ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் உட்கார்ந்துள்ளது.

ட்ரெயிலர் வெளியீடு

ட்ரெயிலர் வெளியீடு

இதையடுத்து கடந்த ஏப்ரல் 2ம் தேதி படத்தின் ட்ரெயிலர் வெளியானது. ட்ரெயிலரும் 44 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இதேபோல 3 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் மற்றொரு சிறப்பான பிரமோஷனாக படத்திற்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் சன் நியூசில் பேட்டியளிக்க உள்ளார்.

பீஸ்ட்டில் 3 பாடல்கள்

பீஸ்ட்டில் 3 பாடல்கள்

அனிருத் இசையில் படத்தில் மொத்தமாக 3 பாடல்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை 2 பாடல்கள் வெளியான நிலையில் அடுத்த பாடலும் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை இதுகுறித்த அப்டேட் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

அனிருத் ட்வீட்

அனிருத் ட்வீட்

இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பீஸ்ட்மோட் என்று குறிப்பிட்டு படத்தின் பாடலை ரிலீஸ் பண்ணலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளதாகவும், மிகவும் சிறப்பாக பாடல் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எப்போது வெளியிடப்பட உள்ளது என்று குறிப்பிடவில்லை.

Recommended Video

Kiruthiga Udhayanidhi Exclusive | Paper Rocket Series பண்ண முடியாதுன்னு நினச்சேன் | Filmibeat Tamil
அடுத்த சம்பவம் லோடிங்

அடுத்த சம்பவம் லோடிங்

இதனிடையே சன் பிக்சர்சும் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த சம்பவம் லோடிங் என்று குறிப்பிட்டுள்ளது. நாளைக்கு படத்தின் 3வது சிங்கிள் வெளியாகவுள்ளதாக பதிவிட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்களின் உற்சாகம் மேலும் கரைப்புரண்டுள்ளது. படத்தின் 2 பாடல்கள் உற்சாகமான விஜய்யை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், 3வது பாடல் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X