இதிலும் விஜய்தான் நம்பர் ஒன்…பிரபல யூடியூபர் பதிவு !!

சென்னை : விஜய் நடித்து ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் பீஸ்ட். நெல்சன் படத்தை இயக்க பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, கிங்ஸ்லி போன்ற பலர் இதில் நடித்துள்ளனர்.

கடந்த வாரம் ரிலீசான பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் பல சாதனைகளை படைத்தது.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பமான சில மணி நேரங்களிலேயே முழு டிக்கட்டுகளும் விற்றுத் தீர்த்தது. இதைக் குறிப்பிடும் வகையில் ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவை போட்டுள்ளார்.

பீஸ்ட் மூன்றாவது பாடல்

பீஸ்ட் மூன்றாவது பாடல்

பீஸ்ட் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ரசிகர்கள் படத்தைப் பார்க்க மிகவும் ஆவலாக இருப்பது தெரிகிறது. கடந்த வாரம் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் இதுவரை எந்த பட ட்ரெய்லரும் செய்யாத சாதனையை செய்தது. இதற்கு முன்னர் யூட்யூபில் ரிலீசான அரபிக் பத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் பிளாக்பஸ்டர் ஆகின. இதற்கிடையில் பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜயுடன் மோதும் கே ஜி எஃப் 2

விஜயுடன் மோதும் கே ஜி எஃப் 2

ஏப்ரல் 13ம் தேதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஒரு நாள் கழித்து ஏப்ரல் 14ஆம் தேதி Yash கதாநாயகனாக நடிக்கும் கே ஜி எஃப் 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. பெரும்பாலும் தனியாக ரிலீஸ் ஆகும் விஜய் படம் இந்த முறை கேஜிஎப் 2 படத்துடன் மோதுவதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேஜிஎப் 2 Pan India படமாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் பீஸ்ட் படத்தை முந்த முடியாது என அவரது ரசிகர்கள் வலைத்தளங்களில் அலப்பரை செய்து வருகின்றனர். இதற்கு முன்னர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்துடன் கார்த்தி நடித்த கைதி வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அது வேற வாய்

அது வேற வாய்

யூடியூபில் திரைப்பட விமர்சனம் செய்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். வணிக ரீதியான எந்த படத்தையும் சகட்டுமேனிக்கு குறை சொல்பவர். அஜித் விஜய் படங்களை தரக்குறைவாக விமர்சிப்பது தொழிலாக கொண்டவர். விமர்சனங்களுக்குப் பிறகு அவர்களது ரசிகர்களுடன் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டவர். ஆனால் தற்போது விஜய் ரசிகர்கள் பெருமைப்படும் ஒரு விஷயத்தை பதிவு செய்து அவர்களிடம் நல்ல பெயரை வாங்கியுள்ளார் மாறன்.

Recommended Video

விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரைடு.. 'பீஸ்ட்' படக்குழுவினருடன் ஜாலி ஜிம்கானா!
விஜய் நம்பர் 1

விஜய் நம்பர் 1

ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ரிலீசுக்கு ஒரு வாரம் முன்பே ஆன்லைன் புக்கிங்கில் ஹவுஸ்புல் ஆகி வருகிறது பீஸ்ட். அண்ணாத்த, வலிமை, எதற்கும் துணிந்தவன் படங்கள் ரிலீசுக்கு முந்தைய நாள் கூட இந்த அளவுக்கு நிரம்பவில்லை. யூடியூப் நியூஸ், அட்வான்ஸ் புக்கிங் இரண்டிலும் நம்பர்-1 இடங்களில் விஜய் உள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியோடு இதை ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X