பீஸ்ட் ட்ரெயிலர் வெளியானது... 15 நிமிடங்களில் 2 மில்லியன் வியூஸ்!
சென்னை : நடிகர் விஜய் 3நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு இந்த ட்ரெயிலர் தீனிப் போட்டுள்ளது. திரையரங்குகளிலும் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் படம்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது பீஸ்ட் படம். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

மிரட்டலான ட்ரெயிலர்
படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலருக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை லேட்டாக பூர்த்தி செய்தாலும் லேட்டஸ்டாக வெளியாகியுள்ளது படத்தின் மிரட்டலான ட்ரெயிலர்.

கடத்தல் காட்சிகள்
இதில் மக்களின் சிலரை கடத்தி வைத்துள்ளது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன. ட்ரெயிலரில் மிரட்டலான மற்றும் மாசான விஜய்யை பார்க்க முடிகிறது. இவருக்கு மட்டும் வயதே ஆகாதோ என்று தோன்றும்படியான தோற்றத்தில் விஜய் காணப்படுகிறார். தொடர்ந்து சிறப்பான வசனங்களும் காணப்படுகின்றன.
Recommended Video

கூர்க்கா படத்தின் சாயல்
அனிருத் இசையின் பின்னணி சிறப்பாக உள்ளது. ஆயினும் சில காட்சிகள், கூர்க்கா, மணிஹெய்ஸ்ட் போன்றவற்றின் சாயல் இந்த ட்ரெயிலரில் காணப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படம் வெளிவந்தால்தான் இந்த விமர்சனங்களுக்கு சரியான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
15 நிமிடங்களில் 2 மில்லியன் வியூஸ்
இதனிடையே ட்ரெயிலர் வெளியான 5 நிமிடங்களில் ஒரு மில்லியன் வியூசை ட்ரெயிலர் எட்டியுள்ளது. 15 நிமிடங்களில் 2 மில்லியன் வியூஸ்களை ட்ரெயிலர் எட்டியுள்ளது. இதேபோல 3 லட்சம் லைக்ஸ்களையும் யூடியூபில் ட்ரெயிலர் எட்டியுள்ளது. வெறித்தனமான விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தை இந்த எண்ணிக்கைகள் காட்டுகின்றன.


Click it and Unblock the Notifications











