யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர்... மாஸ் காட்டும் விஜய்!

சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து ட்ரெயிலரை வெளியிட கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது.

விஜய்யின் பீஸ்ட் படம்

விஜய்யின் பீஸ்ட் படம்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாகி பட்டையை கிளப்பி வந்த நிலையில் ரசிகர்கள் பாடல்களை கொண்டாடினர்.

வீர ராகவன் கேரக்டர்

வீர ராகவன் கேரக்டர்

இந்தப் படத்தில் ரா ஏஜெண்டாக வீரராகவன் என்ற கேரக்டரில் நடிகர் விஜய் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு போஸ்டரும் ரசிகர்களை கவரும் வகையில் வெளியானது. தொடர்ந்து பீஸ்ட் மற்றும் விஜய் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலேயே இருந்தனர். ரசிகர்கள் இந்தப் படத்தை திருவிழாவாக கொண்டாட காத்திருக்கின்றனர்.

பீஸ்ட் திருவிழா

பீஸ்ட் திருவிழா

பீஸ்ட் திருவிழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பந்தக்கால் நடும் நிகழ்வையும் ரசிகர்கள் நடத்தினர். தொடர்ந்து ட்ரெயிலர் ரிலீசுக்கான கோரிக்கையை ரசிகர்கள் வைத்த நிலையில், நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இதையடுத்து இந்த ட்ரெயிலரை யூடியூபில் ரசிகர்கள் தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே வைத்துள்ளனர்.

மில்லியன் கணக்கில் வியூஸ்

மில்லியன் கணக்கில் வியூஸ்

நேற்றைய தினம் சில நிமிடங்களிலேயே ட்ரெயிலர் மில்லியன் கணக்கில் வியூஸ்களையும் ஏராளமான லைக்ஸ்களையும் பெற்றது. நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்கள் இந்த ட்ரெயிலரை தொடர்ந்து ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த ட்ரெயிலர் 2.3 கோடி வியூஸ்களை பெற்றுள்ளது.

ரெக்கார்டுகளை பீட் செய்த ட்ரெயிலர்

ரெக்கார்டுகளை பீட் செய்த ட்ரெயிலர்

இதேபோல 2.1 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. விஜய்யின் முந்தைய ரெக்கார்ட்டுகளை இந்த ட்ரெயிலர் பீட் செய்து வருகிறது. படத்தின் ட்ரெயிலரை திரையரங்குகளில் சென்று கொண்டாட நேற்றைய தினம் படத்தின் இயக்குநர் நெல்சன் அறிவுறுத்தியிருந்தார்.

Recommended Video

திருநெல்வேலி: 'பீஸ்ட்' ட்ரைலர் பார்த்த குஷியில்... தியேட்டரில் சீட்டுக்களை உடைத்த விஜய் ரசிகர்கள்!
 ட்ரெயிலரை பகிர்ந்த விஜய்

ட்ரெயிலரை பகிர்ந்த விஜய்

இந்த ட்ரெயிலரை நடிகர் விஜய்யும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். படத்தின் ட்ரெயிலரை திரையரங்குகளில் சென்று எக்ஸ்பீரியன்ஸ் செய்ய ரசிகர்கள் பலர் திரையரங்குகளில் கூடியிருந்தனர். அவர்களின் உற்சாக கொண்டாட்டத்தை திரையரங்க வாயில்களில் பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X