டெல்லியில் முகாமிட்டுள்ள பீஸ்ட் டீம்.. பரபரக்கும் படப்பிடிப்பு.. தீயாய் நடக்கும் வேலை!

சென்னை: பீஸ்ட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியுள்ளது.

கோலாமவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகிய இரண்டு நடிகைகள் நடிக்கின்றனர்.

முதல் ஷெட்யூல் ஜார்ஜியாவில்

முதல் ஷெட்யூல் ஜார்ஜியாவில்

இயக்குநர் செல்வராகவன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் விடிவி கணேஷ், யோகி பாபு, சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் படத்தின் முதல் ஷெட்யூல் ஜார்ஜியாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

தள்ளிப்போன படப்பிடிப்பு

தள்ளிப்போன படப்பிடிப்பு

இதனை தொடர்ந்து இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் நடைபெறும் என பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது.
ஆனால் படத்தின் ஹீரோயினான பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையும் உச்சத்தில் இருந்ததால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

சென்னை கோகுலம் ஸ்டுடியோ

சென்னை கோகுலம் ஸ்டுடியோ

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் குறைந்துள்ளதால் மீண்டும் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. "

டெல்லியில் படப்பிடிப்பு

டெல்லியில் படப்பிடிப்பு

அப்போது விளம்பர படத்தின் ஷூட்டிங்கிற்காக அந்த ஸ்டுடியோவுக்கு வந்த கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தார். அந்த போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியுள்ளது.

டெல்லியில் பீஸ்ட் படக்குழு

டெல்லியில் பீஸ்ட் படக்குழு

படப்பிடிப்புக்காக இடங்களை தேர்வு செய்ய உதவி இயக்குநர்கள் முன்னதாகவே டெல்லி சென்றிருந்தனர். இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் 'பீஸ்ட்' படத்தின் முழு குழுவினரும் தயாரிப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றனர். ஒரு முக்கிய அதிரடி காட்சியை டெல்லியில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அக்டோபரில் நிறைவு

அக்டோபரில் நிறைவு

இன்னும் சில வாரங்களுக்கு டெல்லியில் படப்பிடிப்பு நடைபெறும் படக்குழு அங்கு தான் முகாமிட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அக்டோபர் மாதத்துக்குள் முழு படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. பீஸ்ட் திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாஜ்மகால் முன்பு அஜித்

தாஜ்மகால் முன்பு அஜித்

நடிகர் அஜித்தும் தற்போது டெல்லியில் தான் உள்ளார். ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித், அண்மையில் தாஜ்மகால் முன்பு அவர் எடுத்த போட்டோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X