கையில் துப்பாக்கி, வாயில் தோட்டா...மாஸ் காட்டிய பீஸ்ட் இரண்டாவது லுக்
சென்னை : விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 65 படத்தின் அடுத்தடுத்த விஜய் லுக்குகளை வெளியிட்டு அசத்தி உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட்டாக அவருக்கும் அவரது ரசிகர்களுக்கு இவற்றை வழங்குவதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்திற்கு தளபதி 65 என தற்காலிகமாக பெயர் வைத்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் ஜார்ஜியாவில் நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்ததும், ஜுலை மாதத்தில் துவங்கப்பட உள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமாக ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற செட் அமைக்கப்பட்டு வந்தது.

அனல் பறந்த ஃபஸ்ட்லுக்
அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இது இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 65 படத்தின் ஃபஸ்ட்லுக்கை நேற்று மாலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. கையில் gun உடன் நிற்கும் விஜய்யின் மாஸ் லுக்காக ஃபஸ்ட்லுக் அமைந்தது.

டிரெண்டிங் ஆன பீஸ்ட்
அத்துடன் படத்தின் டைட்டில், பீஸ்ட் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து gunshot என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, அது ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கப்பட்டது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை விஜய்யின் பீஸ்ட் ஃபஸ்ட்லுக்கை பாராட்டினர்.

பரபரப்பை கூட்டிய சன் பிக்சர்ஸ்
இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே ட்விட்டரில் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த சன் பிக்சர்ஸ், இது இன்னும் முடியல. இனிமே தான் ஆரம்பமே என்ற வாசகத்துடன் விஜய் நடித்த படங்களின் ஆக்ஷன் காட்சிகளை ஒன்றிணைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டது. அத்துடன் நள்ளிரவு 12 மணிக்கு பீஸ்ட் இரண்டாவது லுக் வெளியிடப்பட உள்ளதாக அறிவித்தது.
அனைவருக்கும் தளபதி விஜய்யின் பர்த்டே ட்ரீட் என குறிப்பிட்டு மற்றொரு ட்வீட் வெளியிட்டு பரபரப்பை கூட்டியது. இதனால் ட்விட்டர் டிரெண்டிங்கில் சன் பிக்சர்ஸ் முதலிடம் பிடித்தது.

12 மணிக்கு இரண்டாவது லுக் வெளியீடு
சரியாக 12 மணிக்கு கோலிவுட்டின் பீஸ்ட் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து என்ற வாசகத்துடன் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டது. இதில், சுற்றிலும் ஹெலிகாப்டர்கள் பறக்க பெரிய துப்பாக்கி அருகில், கையில் துப்பாக்கியுடனும், வாயில் சிகரெட்டுடனும் விஜய் அசாட்டால சுடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
Recommended Video

12 மணிக்கு இரண்டாவது லுக் வெளியீடு
சரியாக 12 மணிக்கு கோலிவுட்டின் பீஸ்ட் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து என்ற வாசகத்துடன் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டது. இதில், சுற்றிலும் ஹெலிகாப்டர்கள் பறக்க பெரிய துப்பாக்கி அருகில், கையில் துப்பாக்கியுடனும், வாயில் துப்பாக்கி தோட்டாவுடனும் விஜய் அசால்டாக சுடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

குவியும் லைக்குகள்
இதனை பார்க்கும் போது படத்தில் ஏராளமான ஆக்ஷன், gun shot காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்பதை கணிக்க முடிகிறது. இந்த படம் விஜய்யின் மாஸை பல மடங்கு அதிகரிக்க செய்யும் என்பதில் சந்தேகமில்லை. பீஸ்ட் இரண்டாவது லுக் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது. இதனை சன் பிக்சர்ஸ் வெளியிட்ட 10 நிமிடங்களில் 40,000 க்கும் அதிகமாக லைக்குகள் குவிந்துள்ளது.


Click it and Unblock the Notifications











