தண்ணீரில் மிதக்கும் பீஸ்ட் படத்தின் ஷாப்பிங் மால் செட்... வெளியான புகைப்படம்!

சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் நெல்சன் இயக்கிவரும் படம் பீஸ்ட்.

இந்தப் படத்திற்காக சென்னையில் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையை அடுத்து இந்த செட் தற்போது தண்ணீரில் மிதந்து வருகிறது.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னையில் தொடர் படப்பிடிப்பு

சென்னையில் தொடர் படப்பிடிப்பு

தொடர்ந்து அடுத்தடுத்த படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்கென சென்னையில் பிரம்மாண்டமான அளவில் ஷாப்பிங் மால் செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. படத்தில் விஜய்க்கு வில்லனாக மிரட்டலாக நடித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

வில்லனாக செல்வராகவன்

வில்லனாக செல்வராகவன்

எப்போதும் அமைதியாக காட்சியளிக்கும் செல்வராகவனை மிரட்டலான வில்லனாக பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் ஜார்ஜியாவில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும் விரைவில் சூட்டிங்கை முடித்துக் கொண்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டில் ரிலீஸ்?

தமிழ் புத்தாண்டில் ரிலீஸ்?

அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக தமிழ் புத்தாண்டையொட்டி இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது தொடர் மழை காரணமாக தடைப்பட்டுள்ளது. படத்திற்காக போடப்பட்டுள்ள ஷாப்பிங் மால் செட், மழைநீரில் மூழ்கியுள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவனுடன், யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இயக்குநர் நெல்சனின் முந்தைய படமான டாக்டர் மிகுந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ள நிலையில் பீஸ்ட் படத்திற்கு மிகுதியான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அனிருத் இசை

அனிருத் இசை

படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். கலை இயக்குநராக கிரண் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே மழையால் பீஸ்ட் படத்தின் ஷாப்பிங் மால் செட் தண்ணீரால் சூழ்ந்திருந்தாலும் அரங்கிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர்.

மழையால் பாதித்த சூட்டிங்

மழையால் பாதித்த சூட்டிங்

மழையால் சூட்டிங் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. மொத்தத்தில் அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X