திரை தீப்பிடிக்கும் பீஸ்ட்டின் 3வது பாடல்... அரை மணிநேரத்தில் மில்லியன் வியூஸ்!

சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் அதிரடியாக உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள நிலையில் வரும் 13ம் தேதி சர்வதேச அளவில் படம் ரிலீசாக உள்ளது. இந்தியாவில் 5 மொழிகளில் படம் ரிலீசாக உள்ளது.

விஜய்யின் பீஸ்ட் படம்

விஜய்யின் பீஸ்ட் படம்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ரா ஏஜெண்டாக வீரராகவன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் 2 பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

கடத்தல் காட்சிகள்

கடத்தல் காட்சிகள்

படத்தில் கடத்தல் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ட்ரெயிலரில் தீவிரவாதிகள் பிணயக் கைதிகளாக வைத்துள்ள பொதுமக்களை நடிகர் விஜய் காப்பாற்றுவதாக கதைக்களம் காணப்படுகிறது.

வரவேற்பை பெற்ற 2 பாடல்கள்

வரவேற்பை பெற்ற 2 பாடல்கள்

படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இதனிடையே தற்போது படத்தின் 3வது பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலின் லிரிக்சை விவேக் எழுதியுள்ள நிலையில், பாடலுக்கு இசையமைத்து பாடியுள்ளார் அனிருத். ரசிகர்கள் இந்தப் பாடலுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர்.

பீஸ்ட் திருவிழா

பீஸ்ட் திருவிழா

படம் ரிலீசாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலரும் வெளியிடப்பட்டு படத்திற்கான சூப்பர் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் இந்தப் படத்திற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் பீஸ்ட் படத்தை திருவிழாவாக்கும் வகையில் ரசிகர்கள் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.

பந்தக்கால் நட்ட ரசிகர்கள்

பந்தக்கால் நட்ட ரசிகர்கள்

திருவிழாவிற்கு கடந்த வாரத்தில் பந்தக்கால் நட்ட நிகழ்வும் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் படம் ரிலீசாக உள்ள நிலையில் வட இந்தியாவிலும் படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டிக்கெட் புக்கிங் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றன.

அரைமணி நேரத்தில் மில்லியன் வியூஸ்

அரைமணி நேரத்தில் மில்லியன் வியூஸ்

தற்போது 3வது பாடல் ரிலீசாகியுள்ள நிலையில் வெளியான அரை மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்களை பாடல் பெற்றுள்ளது. ரசிகர்கள் பாடலை தெறிக்கவிட்டு வருகின்றனர். திரை தீப்பிடிக்கும் என்று துவங்கும் இந்தப் பாடல் மற்ற 2 பாடல்களை போல இல்லாமல் ரசிகர்களின் இதயத்தை தீப்பிடிக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X