அச்சச்சோ... பீஸ்ட் பட கதை லீக் ஆகிடுச்சா...பதறி போன விஜய் ரசிகர்கள்

vijay's beast storyline leaked...makers and fans are get upset

சென்னை : புது படங்கள், அதிலும் எதிர்பார்க்கப்படும் மாஸ் படங்களை தியேட்டரிலோ அல்லது ஓடிடி.,யிலோ ரிலீஸ் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட்டு வந்தார்கள். இன்னும் சில படங்களை தியேட்டர் ரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியிட்டு வந்தனர் தமிழ் ராக்கர்ஸ் போன்றவர்கள்.

இந்த பைரசி பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்தும் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண முடியாமல் திரை துறையினர் தவித்து வருகின்றனர். பல படங்கள் தியேட்டரில் தாக்குபிடிக்க முடியாமல் தோற்று போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.

லீக்கான பீஸ்ட் கதை

லீக்கான பீஸ்ட் கதை

முதலில் ரிலீஸ் ஆவதற்கு முன்பு தான் படத்தை ரிலீஸ் செய்து வந்தனர். ஆனால் படம் எடுத்து முடிப்பதற்குள்ளாகவே படத்தின் கதையை லீக் செய்யும் அளவிற்கு வந்து, திரைத்துறையை அதிர வைத்துள்ளனர். அப்படி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் கதையை தான் தற்போது லீக் செய்துள்ளனர்.

சென்னையில் ஷுட்டிங்

சென்னையில் ஷுட்டிங்

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் ஷுட்டிங், சென்னைக்கு அருகே ஸ்ரீ கோகுலம் ஸ்டூடியோசிஸ் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 23 வரை இங்கு தான் மூன்றாம் கட்ட ஷுட்டிங் நடத்தப்படும். அதற்கு பிறகு தான் படக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாக கூறி வந்தனர்.

இதுதான் கதையா

இதுதான் கதையா

இந்நிலையில் கோகுலம் ஸ்டூடியோசில் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் போன்ற செட் அமைக்கப்பட்டு, அங்கு தான் தற்போது ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறதாம். தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, மூன்று வில்லன்களில் ஒருவரான டாம் சாகோ, ஷாப்பிங் மாலில் உள்ளவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கிறாராம். வில்லனிடம் ஆபத்தில் சிக்கி இருக்கும் மக்களை விஜய் காப்பாற்றுகிறாராம்.

இது தான் விஜய் ரோலா

இது தான் விஜய் ரோலா

கதைப்படி ஹீரோ விஜய் ராணுவத்திற்கு உதவி செய்யும் ஸ்பெஷல் ஏஜன்ட்டாம். அவர் இது போன்று ஆபத்தில் சிக்கியவர்களை தனது சாதுர்யத்தால் தனக்கே உரிய பாணியில் மீட்பதில் கைதேர்ந்தவராம். இருந்தாலும் இது தான் பீஸ்ட் படத்தின் சரியான கதையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.

சர்வதேச வில்லன்களுடன் மோதல்

சர்வதேச வில்லன்களுடன் மோதல்

சென்னை ஷாப்பிங் மால் போன்ற செட்டில் எடுக்கப்படும் இந்த ஆக்ஷன் காட்சிகளை தொடர்ந்து ரஷ்யா செல்ல உள்ளனர். அங்கு சர்வதேச வில்லன்களுடன் விஜய் மோவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். முக்கிய வில்லனான செல்வராகவனின் மாஸ் என்ட்ரி, மாஸ் ஆக்ஷன் காட்சிகள் தான் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளதாம்.

மொத்த கதையும் சொல்லிட்டாங்களே

மொத்த கதையும் சொல்லிட்டாங்களே

வில்லன்கள் உடனான மோதல், ஆக்ஷன் காட்சிகளுக்கு இடையே பூஜா ஹெக்டேவுடன் காதல்- டூயட், யோகிபாபுவுடன் காமெடி ஆகிய காட்சிகள் இடம்பெறுவது தான் பீஸ்ட் படத்தின் கதையாம். இதுவரை விஜய் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்களை வெளியிட்டு தான் அதிர்ச்சி தந்தார்கள். தற்போது படத்தின் கதையே லீக் ஆகி உள்ளதாம் ரசிகர்களும், படக்குழுவினரும் அதிர்ந்து போய் உள்ளனர்.

அதிர்ந்து போன படக்குழு

அதிர்ந்து போன படக்குழு

கதை லீக்கானதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடும் என்றாலும், சுவாரஸ்யத்தை குறைத்து விடுமே என கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையில் நவம்பரில் தீபாவளியன்று பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக மற்றொரு ஹாட் தகவலும் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X