பிச்சைக்காரனை முந்தி, விஜய்யின் பிகிலை முந்தி... டிஆர்பியில் சாதனைப் படைத்த அஜித்தின் விஸ்வாசம்

By

சென்னை: பொங்கலுக்கு டிவியில் வெளியான 'விஸ்வாசம்' படம் டிஆர்பி ரேட்டிங்கில் சாதனைப் படைத்துள்ளது.

அஜித்குமார், நயன்தாரா, ஜெகபதிபாபு, விவேக், யோகிபாபு, தம்பி ராமையா உட்பட பலர் நடித்து கடந்த வருடம் ஜனவரியில் வெளியான படம், விஸ்வாசம். சிவா இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைத்திருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது.

சிவா இயக்கத்தில் வெளியான வீரம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம் போன்ற படங்கள் சுமாரான வெற்றியை பதிவு செய்தன.

சூப்பர் ஹிட்

சூப்பர் ஹிட்

விமர்சனங்களும் அந்தப் படங்களுக்கு மோசமாக எழுந்த நிலையில், அதை மறக்கடிக்கும் விதமாக விஸ்வாசம் படம் பொங்கல் என்டர்டெயினராக ரிலீசாகி சூப்பர் ஹிட்டானது. ரஜினியின் பேட்ட படத்துடன் கடந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி விஸ்வாசம் படம் திரைக்கு வந்தது. படம் ரிலீஸ் ஆனபோதும் டிரெண்டிங் ஆனது. ஒரு வருஷம் நிறைவான அன்று #1yearofviswasam என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் டிரெண்டாக்கி இருந்தனர்.

மிகப்பெரிய டிஆர்பி

மிகப்பெரிய டிஆர்பி

இந்நிலையில், இந்தப் படம் சன் டிவியில் கடந்த 18 ஆம் தேதி ஒளிப்பரப்பானது. இதையடுத்து #TRPHunterVISWASAMOnSunTv என்ற ஹாஷ்டேக்கையும் #விஸ்வாசம் என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி அஜித் ரசிகர்கள் அப்போது டிரெண்டாக்கி இருந்தனர். 'தமிழ்நாட்டின் பல வீடுகளில் விஸ்வாசம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய டிஆர்பி ரேட்டிங் சன் டிவிக்கு கிடைக்கும்' என்று ரசிகர் ஒருவர் அப்போதே தெரிவித்துள்ளார்.

முறியடிப்பு

முறியடிப்பு

அதை உண்மையாக்குவது போல டிஆர்பி ரேட்டிங்கில் சாதனைp படைத்திருக்கிறது நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம். டிவியில் அதிகமானோர்களால் பார்க்கப்பட்ட தென்னிந்திய படமாக, சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் இதுவரை இருந்தது. டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்த படம் இதுதான். இந்தச் சாதனையை நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் முறியடித்துள்ளது.

விஜய்யின் பிகில்

அதோடு பொங்கல் பண்டிகைக்கு கடந்த 15 ஆம் தேதி விஜய் நடித்த பிகில் படம் சன் டிவியில் ஒளிபரப்பானது. ஆனால், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிரட்டிய பிகில், டிவி பிரிமீயரில் பெரிய சாதனையை நிகழ்த்தவில்லை. இதையடுத்து அஜித் ரசிகர்கள் #KINGofTRPThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை டிரெண்ட்டாக்கியுள்ளனர்.

4வது இடத்தில் பிகில்

இந்நிலையில், டிவி டிஆர்பி ரேட்டிங்கில் சாதனைப் படைத்த படங்களில் முதல் இடத்தில் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்த விஸ்வாசம், இரண்டாவது இடத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன், மூன்றாவது இடத்தில், ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடித்த பாகுபலி, நான்காவது இடத்தில் பிகில் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X