பிகிலுக்கு கிடைத்த இன்னொரு மகுடம்.. ஜோர்டானிலும் வெளியாகிறது!
எகிப்தை தொடர்ந்து ஜோர்டானில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை விஜய்யின் பிகில் படம் அடைந்துள்ளது. வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் ஜோர்டானில் பிகில் திரையிடப்படுகிறது.
சென்னை: ராயப்பன், மைக்கேல் என டபுள் ரோலில் விஜய் அசத்தியுள்ள படம் பிகில்.
தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் படம் கடந்த 11 நாட்களில் 260 கோடிக்கும் வசூலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எகிப்தில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையை தொடர்ந்து, ஜோர்டானில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் பிகில் பெற்றுள்ளது.

கால்பந்து
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக எடுக்கப்பட்டுள்ள விஜய்யின் பிகில் திரைப்படம், உலகளவில் பெண்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண், கர்ப்பிணி பெண், உடல் பருமனான பெண், ஏழ்மையான பெண்கள் என யாராக இருந்தாலும், முயற்சி செய்தால் சாதிக்கலாம் என்ற மிகப்பெரிய மெசேஜ் இருப்பது பிகில் படத்தின் வெற்றிக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

வசூல்
ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் 180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பிகில் திரைப்படம் 11 நாட்களில் 260 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை அர்ச்சனா கல்பாத்தி இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. பிகில் படம் அத்தனை கோடி வசூலிக்கவில்லை என்ற எதிர் வாதமும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

முதல் தமிழ் படம்
எகிப்து நாட்டில் முதல் தமிழ் படமாக விஜய்யின் பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியானது. இந்நிலையில், எகிப்தை தொடர்ந்து ஜோர்டானில் வரும் நவம்பர் 15 மற்றும் 16ம் தேதி பிகில் திரைப்படம் திரையிடப்படுகிறது. ஜோர்டானில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் பிகில் பெற்றுள்ளது. அதேபோல ஐமாக்ஸ் திரையில் வெளியான முதல் திரைப்படமும் விஜய்யின் பிகில் தான்.

காற்று மாசு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசு காரணத்தால், வேறு இடத்திற்கு படத்தின் ஷூட்டிங்கை மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் எந்த இடத்திற்கு ஷூட்டிங் மாற்றப்படுகிறது என்ற தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











