இப்போதே பிரச்சனை மேல் பிரச்சனை.. பிகில் படத்திற்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்.. மறுபடியுமா?

நடிகர் விஜய் நடித்திருக்கும் பிகில் படத்திற்கு இப்போதே பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

சென்னை: நடிகர் விஜய் நடித்திருக்கும் பிகில் படத்திற்கு வரிசையாக பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரிய வைரலாகி உள்ளது.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திரில்லர் ஸ்போர்ட்ஸ் ஜானரில், படம் நிறைய டிவிஸ்ட் மற்றும் செண்டிமெண்ட் உடன் உருவாக்கப்பட்டு இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

போஸ்டர்

போஸ்டர்

இந்த நிலையில் பிகில் படத்தின் போஸ்டரில் நடிகர் விஜய் இறைச்சி வியாபாரிகளை அசிங்கப்படுத்திவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் காலில் செருப்புடன் அமர்ந்து இருக்கிறார். அவர் தனது செருப்பு காலை இறைச்சி வெட்டும் கட்டை மீது வைத்துள்ளார்.

பிகில் எப்படி

பிகில் எப்படி

இதனால் பிகில் பட போஸ்டர் தங்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று கறிக்கடை உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தில் குதித்துள்ளது. பிகில் பட போஸ்டரை கிழித்து அவர்கள் போராடி வருகிறார்கள். இதுதான் பிகில் படத்திற்கு எழுந்த முதல் பிரச்சனை என்று கூட கூறலாம்.

சிவாஜி சிக்கல்

சிவாஜி சிக்கல்

அதற்கு அடுத்து நடிகர் சிவாஜி குறித்து நடிகர் விஜய் பிகில் மேடையில் பேசியது பிரச்சனையாகி உள்ளது. நடிகர் சிவாஜியை விவேக் அசிங்கப்படுத்திவிட்டார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சில அமைப்புகள் கூறியுள்ளது. இன்னும் போக அவருக்கு இது தொடர்பாக இணையத்தில் மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.

சுபஸ்ரீ மரணம்

சுபஸ்ரீ மரணம்

அதேபோல் பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் அடைந்தது குறித்தும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது கட் செய்யப்பட்டது. சிலர் கொடுத்த அழுத்தத்தின் பெயரில் இந்த காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளது. விஜய் பேசியதற்கு எதிராக சிலர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆடியோ விழா

ஆடியோ விழா

இந்த நிலையில்தான் நேற்று பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்று சென்னை சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. கல்லூரிக்குள் தனியார் சினிமா விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது எப்படி என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை சார்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நிறைய பிரச்சனை

நிறைய பிரச்சனை

இப்படி வரிசையாக பிகில் படத்திற்கு அடுத்தடுத்து பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அதே சமயம் படத்தின் வெளியீட்டிற்கு முன்பும் இதேபோல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். மெர்சல், சர்க்கார் படம் போல இதற்கு படத்தின் வெளியீட்டின் போது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X