தளபதியோட பிகில் படத்தோட ட்ரெயிலர்... யூடியூபில் 55 மில்லியன் வியூஸ்களை பெற்று புதிய சாதனை
சென்னை : தளபதி விஜய் -நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த படம் பிகில்.
புட்பால் கோச்சாக வந்து பெண்கள் அணியை வெற்றிபெற செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் விஜய்.
இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியான பொழுதில் அதிகமான வியூஸ்களை பெற்றது. இந்நிலையில் தற்போது 55 மில்லியன் வியூஸ்களை யூடியூப் பக்கத்தில் பெற்றுள்ளது.

புட்பால் கோச்
தளபதி நடிப்பில் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்த படம் பிகில். புட்பால் கோச்சாக வந்து பெண்கள் அணியை வெற்றி பெற செய்வதாக இந்த படத்தில் விஜய் நடித்திருந்தார். அட்லி இயக்கத்தில் மக்களுக்கு மாஸான அனுபவத்தை கொடுத்த இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

விளையாட்டால் மாற்றம்
கேங்ஸ்டர் படமாகவும் அமைந்த இந்த படத்தில் விளையாட்டு எப்படி அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் குறிப்பாக ஏழ்மை நிலையில் இருக்கும் இளம்பெண்களின் வாழ்க்கையில் விளையாட்டு கொண்டுவரும் மாற்றத்தை மையமாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.

ரசிகர்களின் வரவேற்பு
இசைப்புயல் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பான வகையில் அமைந்திருந்தது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருந்த இந்த படத்தின் ட்ரெயிலர் கடந்த 2019 அக்டோபர் 12ம் தேதி வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த ட்ரெயிலர் வெளியான சில நாட்களிலேயே அதிகமான வியூக்களை பெற்றது.

2.3 மில்லியன் லைக்ஸ்
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெயிலர் 55 மில்லியன் அதாவது 5.5 கோடி வியூக்களை தாண்டியுள்ளது. மேலும் 2.3 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. விஜய் நடிப்பில் வெளிவரும் படங்களின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர்கள் ஆகியவை தொடர்ந்து வசூல்ரீதியாகவும் இத்தகைய வியூக்கள் மூலமும் சிறப்பை பெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications











