இந்தியாவில் இல்லை.. இந்த நாடுகளில் ரிலீசாகும் தளபதி விஜய்யின் அந்த படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

சென்னை: தளபதி விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி வருகிறது. சோஷியல் மீடியா முதல் சர்வதேச மீடியாக்கள் வரை நடிகர் விஜய் பற்றிய பேச்சுக்கள் தான்.

ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இருந்தால், இந்நேரம் தளபதி 65 படம் பற்றிய அப்டேட்கள் குவிந்து கொண்டு இருக்கும்.

ஆனால், டோட்டல் லாக்டவுன் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தீபாவளிக்கு தள்ளிப் போய் இருக்கிறது.

தியேட்டர்கள் திறந்தாச்சு

தியேட்டர்கள் திறந்தாச்சு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தியேட்டர்கள் திறப்பு எப்போது சாத்தியம் என்றே தெரியவில்லை. லாக்டவுன் தளர்வு காரணமாக ஆரம்பிக்கப்பட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தமிழ் நாட்டில் நிறுத்தப்படும் நிலை உருவாகி இருக்கிறது. ஆனால், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் கொரோனா குறைந்துள்ள நிலையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

விஜய் பிறந்தநாள்

விஜய் பிறந்தநாள்

நடிகர் விஜய்யின் 46வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாட தளபதி ரசிகர்கள் ஏகப்பட்ட பிளான்களை போட்டு வருகின்றனர். தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என விஜய் கோரிக்கை விடுத்த நிலையில், நலத்திட்ட பணிகள் செய்யும் நாளாக அதனை இந்த ஆண்டு ரசிகர்கள் கொண்டாட உள்ளனர்.

காமன் டிபி

காமன் டிபி

கோலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் உருவாக்கிய பிறந்தநாள் காமன் டிபியை சமீபத்தில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், அதுல்யா ரவி, வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மோகன் ராஜா, அருண் ராஜா காமராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் வெளியிட்டு இருந்தனர்.

அப்டேட் வருமா?

அப்டேட் வருமா?

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டீசர் அல்லது டிரைலர் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இதுவரையில் எந்தவொரு அப்டேட்டும் படக்குழுவிடம் இருந்து வரவில்லை. தளபதி 65 படத்தின் அப்டேட் மற்றும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் என விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த நிச்சயம் ஒரு சர்ப்ரைஸ் கண்டிப்பா வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தியேட்டரில் ரிலீஸ்

தியேட்டரில் ரிலீஸ்

மாஸ்டர் படம் வெளியாகவில்லை என்ற வருத்தத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மீண்டும் விஜய்யின் பிகில் படம் தியேட்டர்களில் வெளியாகவுள்ள தகவல் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிகில் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X