தளபதி தரிசனம் கிடைக்காதா… பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள் !
சென்னை: தளபதி விஜய் இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தவர் தளபதி.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் தளபதிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தரிசனம் கிடைக்காதா
இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர்கள் நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டு வாசலில் நின்று கொண்டு தளபதியின் தரிசனம் கிடைக்காதா என்று எண்ணி ஏங்கி உள்ளனர். அவரது வீட்டுக்கு வரும் சொகுசு கார்களையும் பார்த்து வருகின்றனர்.

பரிசு பொருட்களுடன்
பெண் ரசிகர்கள் விஜய்க்காக பரிசு பொருட்களுடனும், ஆண் ரசிகர்கள் மாலையுடனும் காத்து இருக்கின்றனர். நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டு விஜய் அண்ணா வெளியில வாங்க என்றும் , தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் கத்தி வருகின்றனர்.

பீஸ்ட்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய்யின் 65வது படத்திற்கு பீஸ்ட் என்று என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியானது. Second லுக் நேற்று இரவு வெளியாகி மிகவும் வைரலானது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

விரைவில் படப்பிடிப்பு
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்டமான முறையில் செட் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











