தளபதி 67 ஹீரோயின் இவரா... வேற லெவலில் ஸ்கெட்ச் போடும் லோகேஷ் கனகராஜ்
சென்னை : தளபதி 67 படத்திற்காக தயாராகி வரும் டீம் பற்றிய அப்டேட் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு கொண்டு போய் விட்டது. தினம் ஒரு அப்டேட் வெளியாகி வருவதால் தளபதி 67 படம் முதலில் வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.
பீஸ்ட் படத்திற்கு பிறகு வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. தளபதி 66 படத்தின் வேலைகள் துவங்கப்பட்டு ஒரு மாதமே ஆகும் நிலையில், விஜய் அடுத்தடுத்து நடிக்க போகும் படங்களின் அப்டேட்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க போகிறார் என தகவல் பரவி வந்தது.

தளபதி 67 டைரக்டர் நான் தான்
ஆனால் அது உண்மை தான் என விக்ரம் ஆடியோ வெளியிட்டு விழா, பேட்டி, விருது வழங்கும் விழா என அனைத்திலும் கன்ஃபார்ம் செய்து விட்டார் லோகேஷ் கனகராஜ். தளபதி 67 படத்தின் ஷுட்டிங், மாஸ்டர் பட ஷுட்டிங் துவங்கப்பட்ட அதே அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 67 பற்றிய அப்டேட்கள் விரைவில் வரும் என லோகேஷ் கனகராஜே கூறி இருந்தார்.

இசையமைப்பாளர் இவரா
தளபதி 67 படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க போவதாக நேற்று தகவல் வெளியானது. மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் - விஜய் - அனிருத் கூட்டணி மீண்டும் ஒன்று சேர உள்ளது. இதனால் பாடல்கள், படம் என அனைத்தும் வேற லெவலில் ஹிட்டாகும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். #Thalapathy67 ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

அட செம அப்டேட்டா இருக்கே
இந்நிலையில் அடுத்த அப்டேட்டாக தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க போகிறாராம். இவர் ஏற்கனவே விஜய்யின் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய 3 பிளாக் பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களும், அதில் இடம்பெற்ற பாடல்களும் வேற லெவலில் ஹிட் ஆகின. இந்நிலையில் தளபதி 67 படத்தில் நான்காவது முறையாக விஜய்யுடன் சேர்ந்து சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் செம பிஸி
சமந்தா தமிழில் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சமீபத்தில் தான் ரிலீசானது. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் காஷ்மீரில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் டிசம்பர் 23 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











