Vijay Bodyguard: ஊரே விமர்சித்தபோது.. விஜய்க்கு ஆதரவாக போஸ்ட் போட்ட பாடிகார்டு.. இப்போ ஆளையே காணோமே?

சென்னை: தளபதி விஜய் என்று சொல்வதைக் கூட அவரது ரசிகர்களே பெரும்பாலும் நிறுத்திக் கொண்டார்கள், தவெக தலைவர் விஜய், நாளைய முதலமைச்சர் விஜய் என்று இணையத்தில் விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பலரும் செயல்பட்டு வரும் நிலையில், விஜய் உடனே இருந்து, விஜய் கடுமையான விமர்சனங்களை சந்தித்தபோது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த வரை விஜய் உடன் பார்க்க முடியவில்லையே என்ற கேள்வி இணையத்தில் பரவலாகவே எழுந்துள்ளது.

அதுவும் விஜய் தற்போது தேர்தல் பிரசாரத்திற்காக வாரம் இரண்டு முதல் மூன்று முறை வீட்டை விட்டு வெளியே வருகிறார். இதனால் அவரைப் பார்க்க பெரும்பாலான ரசிகர்கள் திரள் திரண்டு விடுகிறது. இதில் ரசிகர்கள் பலரும் அவருக்கு மாலை, பூக்கள், கட்சித் துண்டுகள், கண்ணாடிகள், இளநீர், தர்பூசணி, குளிர்பானங்கள் என பலவற்றை விஜய்யை நோக்கி வீசுகிறார்கள். விஜய் பார்த்தால் விஜய் கேட்ச் பிடிக்கும்படி வீசுகிறார்கள். அதுவே விஜய் பார்க்கவில்லை என்றால், 'இந்தா வச்சுக்கோ' என விஜய் வாகனத்தை நோக்கி வீசி விடுகிறார்கள். இது தொடர்பான பல வீடியோக்களை பார்த்து வருகிறோம்.

Vijay s Bodyguard Who Defended Him Goes Missing What Happened

இப்படி இருக்கையில் விஜய் தூத்துக்குடியில் நடத்திய ரோடு ஷோவின் போது அவரது ரசிகர் ஒருவர் விஜய்யை நோக்கி குளிர்பானம் ஒன்றை வீச, அதை விஜய் மிகவும் சாதூர்யமாக கேட்ச் செய்தார். அப்போது விஜய்யின் பாதுகாவலரும் அந்த குளிர்பானத்தை கேட்ச் செய்ய முயற்சித்தார். ஆனால் அதற்குள் விஜய் பிடித்துவிட்டதால், அந்த பாதுகாவலர் விஜய்யை பார்த்து சன்னமாக சிரித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவ, ரசிகர்கள் தொடங்கி இணையவாசிகள் வரை பலரும் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.

பாதுகாவலர் எங்கே?: இந்நிலையில் விஜய் உடன் தற்போது உள்ள இந்த பாதுகாவலருடன் மற்றொரு பாதுகாவலரான அருண் சுரேஷ் என்ற பாதுகாவலர் இருந்தாரே அவர் ஏன் தற்போது விஜய் உடன் இல்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக விஜய் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து கொண்டு கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்குச் சென்ற போது கூட அவருக்குப் பாதுகாவலராக விஜய் அவர்களை அழைத்துச் சென்றாரே, அது தொடர்பான புகைப்படங்கள் கூட வெளியானதே, தற்போது அவரை விஜய் உடன் பார்க்க முடியவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், விஜய் அண்மையில் நடிகை த்ரிஷாவுடன் தயாரிப்பாளர் சுரேஷ் அகோரம் இல்லத் திருமண விழாவிற்கு சென்ற போது பலரும் அவரை காட்டமாக விமர்சித்தனர்.

Vijay s Bodyguard Who Defended Him Goes Missing What Happened

விஜய்க்கு ஆதரவு: அப்போது விஜய்க்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதாவது, " விமர்சனங்களை எல்லாம் கடந்து மேலே வரவேண்டிய கால கட்டம் இது" என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X