விஜய் பிரச்சார கூட்டத்தில் அசம்பாவிதம்.. வலிப்பு வந்து மயங்கி விழுந்த இளைஞர் பலி..
சென்னை: சேலத்தில் தவெக தலைவா் விஜய் பிரசார பொதுக் கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்ட போதும் கூட்டத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளார். கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் பிரச்சாரத்தை தொடங்காமல் இருந்தார். இதையடுத்து இன்று சேலத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தவெக தலைவர் விஜய் மதுரை, திருவாரூர் மற்றும் திருச்சியில் பிரச்சாரம் செய்தார். ஆனால், செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர், தவெக தலைவர் விஜய் பெரிய அளவில் பிரச்சாரம் எதுவும் மேற்கொள்ளவில்லை. சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் இன்று விஜய் கலந்து கொண்டு பேசினார். அதில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என நான் போட்ட அரசியல் குண்டு தி.மு.க. கூட்டணிக்குள் வெடித்து வருகிறது. ஆட்சியில் பங்கு கேட்டால் ஸ்டாலின் சார் பதறுகிறார். தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்கிறார். தேர்தல் வெற்றிக்காக மட்டுமே கூட்டணி வைத்திருக்கிறது தி.மு.க.

ஒருவர் பலி: ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் இது தரவில்லை... அது தரவில்லை எனப்பம்ம மாட்டேன். எந்த எல்லைக்கும் சென்று போராடுவேன். மற்ற கட்சிகள் மாநாடு நடத்தவோ, கூட்டம் நடத்தவோ அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் நான் மக்களை சந்திக்கவோ அல்லது மக்கள் என்னை சந்திக்கவோ இடம் கொடுக்க மாட்டார்கள்; கொடுக்கவும் விடமாட்டார்கள் என்று விஜய் பேசினார். பலவிதமான கட்டுப்பாடுகள் நிபந்தனைகளுடன் இந்த பிரச்சாரக்கூட்டம் நடைபெற்ற போது இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரஜ் என்ற 31 வயது இளைஞருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











