மாஸ்டர் படத்தின் முக்கிய அப்டேட்கள் கசிந்துள்ளன.. அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்!

சென்னை: மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், தற்போது முக்கியமான சில அப்டேட்கள் கசிந்து படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விக்ரம் வேதா, பேட்ட படங்களை தொடர்ந்து, இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

பிகில் படத்தின் வசூல் 300 கோடியை கடந்துள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக கோலிவுட்டே காத்திருக்கிறது.

ரகசியம் காத்த இயக்குநர்

ரகசியம் காத்த இயக்குநர்

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஃபர்ஸ்ட் லுக் படத்தின் ஓபனிங் என்றும், செகண்ட் லுக் இன்டர்வெல் பிளாக் என்றும் மூன்றாவது லுக் கிளைமேக்ஸ் என்ற மிகப்பெரிய சீக்ரெட்டை போட்டுடைத்தார். மேலும், டைட்டில் வெளியாவதற்கு முன்பு வரை, தனது உதவி இயக்குநர்களுக்கு வாத்தி என்ற டைட்டிலேயே கூறியதாகவும், கடைசியாகத் தான் மாஸ்டர் டைட்டில் சர்ப்ரைஸ் ஆக வெளியிட்டேன் என்றும் கூறியிருந்தார்.

லீக்கான கேரக்டர்

லீக்கான கேரக்டர்

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நிறைவடைந்த நிலையில், தற்போது, படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரப் பெயர் ஆதாரத்துடன் கசிந்துள்ளது. ஏற்கனவே, நடிகர் விஜய் இந்த படத்தில் ஜே.டி. என அழைக்கப்படுவார் என்றும், அவருடைய பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என்றும் தகவல்கள் பரவியது.

ஜான் துரைராஜ்

ஜான் துரைராஜ்

ஆனால், விஜய்யின் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் இல்லை என்றும் ஜான் துரைராஜ் தான் என்றும் தற்போது கசிந்துள்ள ஐடி கார்ட் புகைப்படத்தால் உறுதியாகி உள்ளது. பிகில் படத்தில் மைக்கேல் ராயப்பானாக கிறிஸ்துவ பெயருடன் நடித்த விஜய், இந்த படத்திலும் ஜான் துரைராஜ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

கல்லூரி ஆசிரியர்

கல்லூரி ஆசிரியர்

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி ஆசிரியராக நடித்துள்ளார் என்ற விஷயம் ஏற்கனவே வெளியாகி இருந்தது. டெல்லியில் கல்லூரி ஒன்றில் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றது. படத்தில் அந்த கல்லூரியின் பெயர் செயிண்ட் ஜெஃப்ரீஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி என்பதும் அந்த ஐடி கார்ட் மூலமாக தெளிவாகி உள்ளது.

வேற லெவல் கேமரா வொர்க்

வேற லெவல் கேமரா வொர்க்

யுத்தம் செய், மாயா, தீரன் அதிகாரம் ஒன்று, அடங்கமறு, கைதி உள்ளிட்ட பல படங்களில் மிரட்டலான ஒளிப்பதிவை செய்து வந்த சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் உருவாகி வருகிறது. கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தில், லோகேஷ் கனகராஜுடன் பணியாற்றிய சத்யன் சூரியன் மாஸ்டர் படத்திலும் தொடர்ந்து பணியாற்றியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X