Vijay: விஜய் மேல வழக்கு போடுங்க.. தேர்தல் விதிகளை மீறிட்டாரு.. ஆதாரத்துடன் சொன்ன பெ. சண்முகம்
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், அவர் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள தேவாலயத்தில் வழிபாடு நடத்தினார். குறிப்பாக தேவாலயத்திற்குள் முட்டி போட்டுக் கொண்டே சென்று வழிபட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்களோ, அண்ணா நீ இவ்வளவு கஷ்டபடனுமா அண்ணா என்று எல்லாம் எமோஷனல் வீடியோ போட்டுக் கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் விஜய் தேவாலயத்திற்குள் சென்று தரிசனம் செய்த போது தனது கட்சித் துண்டை தோளில் போட்டபடி சென்று வழிபாடு நடத்தினார். இது தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, “ மத வழிபாட்டு இடங்களுக்குள் (கோயில், தேவாலயங்கள், மசூதி) கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு கேட்கக்கூடாது என்ற தேர்தல் நடத்தை விதியை மீறிய விஜய் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக தனது தொகுதியில் இரண்டாவது முறையாக பிரசாரம் செய்ய திருச்சிக்கு மீண்டும் சென்றார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் எதிர் கொள்ளும் முதல் தேர்தல், அதுவும் பொதுத் தேர்தல் என்பதால் தேர்தலில் விஜய் எத்தனை தொகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்வார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் அனைத்து மாவட்டங்களுக்குமே கூட செல்லவில்லை. கடலூருக்கு பிரசாரம் செய்யச் செல்வதாக கூறிவிட்டு, அனுமதியும் வாங்கிவிட்டு, மூன்று முறை ரத்து செய்தார்.
இதனால் விஜய் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய செல்லவில்லை. சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளுக்குமே கூட செல்லவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்வது இல்லை என இப்படியாக பல விமர்சனங்கள் இருக்கும் போது, விஜய் தான் போட்டியிடும் இரண்டு தொகுதிகளான பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் இரண்டு முறை பிரசாரம் செய்துவிட்டார்.
பல தொகுதிகளில் விஜய் கட்சியின் வேட்பாளர்கள் விஜய் போன்ற உருவத் தோற்றம் கொண்ட மேடை நாடக கலைஞர்களை வைத்து பிரசாரம் செய்தனர். அதேபோல் சில வேட்பாளர்கள், விஜய்யின் உருவ பொம்மையை வைத்து பிரசாரம் செய்தனர். ஒரு வேட்பாளர் எல்லாம் 3டி விஷுவல் மூலம் பிரசாரம் செய்தார். தனது சொந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கூட விஜய் பிரசாரம் செய்யாதது அரசியல் தளத்தில் கேள்விக்குறியாகி உள்ளது.
விஜய் திருச்சியில் ஏப்ரல் 19ஆம் தேதி பிரசாரம் செய்ய வந்தார். அப்போது திருச்சியில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் முட்டி போட்டு நடந்து சென்று தேர்தலில் வெற்றி பெற வேண்டினார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது.
இந்நிலையில் விஜய் தேவாலயத்திற்குள் சென்று தரிசனம் செய்த போது தனது கட்சித் துண்டை தோளில் போட்டபடி சென்று வழிபாடு நடத்தினார். இது தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, " மத வழிபாட்டு இடங்களுக்குள் (கோயில், தேவாலயங்கள், மசூதி) கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு கேட்கக்கூடாது என்ற தேர்தல் நடத்தை விதியை மீறிய விஜய் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications