விஜய் முதலமைச்சராக பதவியேற்பாரா?.. கையை அறுத்துக்கொண்ட நபர்.. அசம்பாவிதம் ஸ்டார்ட் ஆகிடுச்சு
சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் கடந்த ஐந்து நாட்களாகவே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது. 108 தொகுதிகளை கைப்பற்றினாலும் மொத்தம் 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வந்தால்தான் பெரும்பான்மை கிடைக்கும். அதன் காரணமாக மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்டது தவெக. அவற்றில் இப்போதுவரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆதரவை கொடுத்திருக்கின்றன. ஆனால் விசிக மாலை தனது முடிவை அறிவிக்கவிருக்கிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவின்போது தமிழ்நாடு அரசியல் எப்படி பரபரப்பாக இருந்ததோ அதேபோன்ற ஒரு நிலைமையை ஜென் ஸி தலைமுறையினர் முதன்முறையாக விஜய்யின் மூலம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவரது கட்சி 108 தொகுதிகளை கைப்பற்றிவிட்டாலும் சபாநாயகர் கணக்கில் ஒரு சீட்டை இழந்து மொத்தம் 107 தொகுதிகள் இறுதியாக இருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 118ஐ தொட முடியவில்லை. எனவே மற்ற காட்சிகளிடம் ஆதரவு கேட்டது. அதன்படி காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கொடுத்தது.

இழுத்தடிப்பு: மொத்தம் தவெகவுக்கு இப்போது 116 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. இன்னும் இரண்டு எம்.எல்.ஏக்கள் வேண்டும். டிடிவி தினகரனின் அமமுக எம்.எல்.ஏவும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்திருப்பதாக ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது போலியான கடிதம், எம்.எல்.ஏ காமராஜ் கையெழுத்து போட்டிருப்பதாக வந்த வீடியோவும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்று டிடிவி தினகரன் அதிரடியை காண்பித்துவிட்டார் இன்றைய செய்தியாளர் சந்திப்பில். அமமுகவின் இந்த பதிலடிக்கு தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் எப்படி ரியாக்ட் செய்யப்போகிறார்களோ என்று தெரியவில்லை.
விசிகவின் நிலை என்ன?: இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு என்னவென்பது குறித்த ஆர்வமும் அனைவரிடமும் எழுந்திருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின், தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த அவர்; இன்று காலை தனது இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். அநேகமாக தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவழியாக இன்று மாலை நான்கு மணிக்கு கண்டிப்பாக முடிவு அறிவிக்கப்படும் என்று விசிக தரப்பு உறுதியளித்திருக்கிறது.
நேரில் சந்திப்பாரா விஜய்?: இன்று காலையே ஆதரவு வந்துவிடும் என்றுதான் தவெகவினர் எதிர்பார்த்தார்கள். விஜய்யும் விசிக அலுவலகத்துக்கு சென்று திருமாவலவனை சந்திப்பார் என்றும் கூறப்பட்டது. அதற்காக புது ஷோஃபா எல்லாம் வந்து விசிக அலுவலகத்தில் இறங்கியது. ஆனால் முடிவு நான்கு மணிக்கு வரும் என்று சொல்லப்பட்டுவிட்டதால்; விஜய் - திருமாவளவன் சந்திப்பு நடக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கமோ ஆதரவு கொடுக்காத விசிக தலைவர் திருமாவளவனையே மீம் போட்டு கலாய்த்துவருகிறார்கள் விர்ச்சுவால் வாரியர்ஸ்.
கையை அறுத்துக்கொண்ட நபர்: இந்நிலையில் அசம்பாவிதம் ஒன்று நடந்துவிட்டது. அதாவது திருமாவளவனை சந்திப்பதற்கு விஜய் நேரில் வருகிறார் என்று தகவல் வந்தவுடன்; அசோக் நகரில் இருக்கும் விசிக அலுவலகம் முன்பு ஏராளமானோர் குவிந்தார்கள். அப்போது வயதான நபர் ஒருவர், 'விஜய்யின் தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு கொடுக்க வேண்டும்' என சொல்லி பிளேடால் தனது கையை அறுத்துக்கொண்டார். ரத்தம் அதிகம் வந்ததை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அருகில் இருந்தவர்கள் அழைத்து சென்றார்கள். விஜய் பதவியேற்க தாமதமாக தாமதமாக அசம்பாவிதமும் தொடங்கிவிட்டது. என்ன நடக்கப்போகிறதோ பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
