காரைக்குடியில் மிஸ் ஆனது கன்னியாகுமரியில் சக்சஸ்.. விஜய் இதை விடமாட்டாரு போலயே!

சென்னை: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 12ஆம் தேதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்காக கன்னியாகுமரிக்குச் சென்ற விஜய் அங்கு தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சைக்கிள் ஓட்டி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி காரைக்குடியில் பிரசாரம் மேற்கொண்ட போது, அங்கும் இது போல சைக்கிள் ஓட்டினார். ஆனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால் தடுமாறி கீழே விழுந்தார். நல்வாய்ப்பாக அவரை அவரது பாதுகாவலர்கள் பிடித்துக் கொண்டனர்.

இந்நிலையில் கன்னியாகுமரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் நடிகர் விஜய் காரைக்குடியில் இதேபோல் சைக்கிள் ஓட்டி பிரசாரம் செய்ய மேற்கொண்ட போது, அது முழுவதுமாக சக்சஸ் ஆகவில்லை. ஆனால் இம்முறை பேரிகார்டுக்குள் சைக்கிள் ஓட்டி தனது சைக்கிள் பிரசாரத்தை சக்சஸ் செய்துள்ளார்.

Vijay s Cycle Campaign Gains Momentum in Kanyakumari After Karaikudi Setback

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய்யின் இந்த சைக்கிள் ஓட்டும் பிரசாரம் அவருக்கு நன்றாகவே கைகொடுக்கும் போலத் தெரிகிறதே என்றும், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்கு செலுத்த நடிகர் விஜய் சைக்கிளில் வாக்குச் சாவடிக்குச் சென்றார். இதனால் அதை மீண்டும் ரசிகர்களுக்கு நினைவு படுத்தத் தான் இது போல சைக்கிளில் பிரசாரம் செய்கிறார் என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன.

சேட்டை பிடித்த விஜய்: அதேபோல் பிரசாரத்திற்காக அனுமதி வாங்கிய இடத்திற்கு முன்னதாக சில கிலோ மீட்டருக்கு முன்னர் இருந்து சைக்கிள் ஓட்டிக் கொண்டு வந்தார். விஜய்யை பலரும் பின் தொடர்ந்து ஓடி வர, அவர்களை எல்லாம் அசால்ட்டாக சைடு வாங்கி வேகமாக ஓட்டிச் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் சரியான சேட்டை பிடித்த பையனாக இருக்கிறாரே என்று பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X