தடகளத்தில் அசத்தும் CM விஜய் மகள்.. கட்டிப்பிடித்து வாழ்த்திய சங்கீதா.. வீடியோவைப் பாருங்க
சென்னை: நடிகரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் குடும்பம் தொடர்பான விஷயங்கள் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக அவரது மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஷாஷா பற்றிய தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இப்படி இருக்கையில், தற்போது திவ்யா ஷாஷா தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, விஜய்யின் மகளான திவ்யா ஷாஷா சமீபத்தில் நடைபெற்ற தடகளப் போட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர், உடனடியாக தனது தாயார் சங்கீதாவை நோக்கி ஓடிச் செல்லும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அப்போது மகளை உற்சாகமாக வரவேற்ற சங்கீதா, அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டுகிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தாயும் மகளும் பகிர்ந்து கொண்ட அந்த உணர்வுபூர்வமான தருணம் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், "திவ்யா ஷாஷா இவ்வளவு வளர்ந்துவிட்டாரா?", "நேற்று வரை சிறுமியாக பார்த்தோம், இப்போது தடகளப் போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்", "அம்மா-மகள் பாசம் செம" என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், தடகளப் போட்டியில் பங்கேற்ற திவ்யா ஷாஷாவுக்கு பலரும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டுத் துறையில் அவர் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில், விஜய்யின் குடும்பம் தொடர்பான விஷயங்கள் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக குடும்ப உறுப்பினர்கள் பொதுநிகழ்ச்சிகளில் தோன்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகும் போதெல்லாம் அவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

எது எப்படியோ... தடகளப் போட்டியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்திய திவ்யா ஷாஷாவையும், அவரை கட்டிப்பிடித்து ஊக்குவித்த சங்கீதாவையும் கொண்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது


Click it and Unblock the Notifications