'மெர்சல்' படத்துக்கு கட்-அவுட் வைக்கப் போய் உயிரிழந்தவிஜய் ரசிகர் !

By Vignesh Selvaraj

திருவனந்தபுரம் : கேரளாவைச் சேர்ந்த தீவிர விஜய் ரசிகரும் விஜய் மக்கள் இயக்கத்தின் திருவனந்தபுரம் செயலாளருமான 'லவ் டுடே' ஶ்ரீநாத் பேருந்து மோதி பலியானார்.

அட்லீ இயக்கத்தில் உருவான 'மெர்சல்' படம் கேரளாவிலும் வெளியாகி அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று இரண்டாவது வாரத்தை இந்தப் படம் எட்டியுள்ளதால் அதற்கான பேனர்களை திருவனந்தபுரத்தில் கட்டிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய கேரள விஜய் மக்கள் இயக்கச் செயலாளர் 'லவ் டுடே' ஸ்ரீநாத் பேருந்து மோதி இறந்தார்.

இவரை மையமாக வைத்து அண்மையில் மலையாளத்தில் 'போக்கிரி சைமன்' என்ற திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீநாத்தின் மரணம் ரசிகர்கள் அனைவரையும் மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

பெரிய நடிகர்களின் படங்கள் வருகிறது என்றாலே திரையரங்குகள் எப்படி கோலாகலமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அண்மையில் கூட விஜய்யின் மெர்சல் படத்தை வரவேற்பதற்கு ரசிகர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதைப் பார்த்திருப்போம். கட்-அவுட், பாலாபிஷேகம் என, பட்டாசு என அதகளப்படுத்துவார்கள் ரசிகர்கள்.

லவ் டுடே ஶ்ரீநாத்

லவ் டுடே ஶ்ரீநாத்

விஜய்யின் 'மெர்சல்' படம் இன்று இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளதால் அதற்கான பேனர்களை திருவனந்தபுரத்தில் கட்டிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய கேரள விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர் 'லவ் டுடே' ஸ்ரீநாத் என்பர் பேருந்து மோதி மரணமடைந்துள்ளார். இவர் பல ஆண்டுகளாக தீவிர விஜய் ரசிகராக இருந்து வருகிறார்.

போக்கிரி சைமன்

போக்கிரி சைமன்

விஜய்யின் தீவிர ரசிகரான இவரை மையமாக வைத்து உருவான 'போக்கிரி சைமன்' என்ற மலையாளப் படம் கடந்த மாதம் வெளிவந்தது. போக்கிரி சைமன் படத்தில் ஸ்ரீநாத் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அப்பானி சரத், தகவல் அறிந்ததும் ஸ்ரீநாத் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ரசிகர்கள் பலி

ரசிகர்கள் பலி

'கத்தி' படம் வெளிவந்தபோது பாலக்காட்டில், விஜய் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்த உன்னி கிருஷ்ணன் என்பவர் தவறி விழுந்து இறந்தார். பைரவா படம் வெளிவந்தபோது, நள்ளிரவில் கட்-அவுட் கட்டி விட்டு வீட்டுக்குத் திரும்பிய, காஞ்சிபுரம் மாவட்ட விஜய் ரசிகர் மன்றச் செயலாளர் இமயம் ரவி, சில பேரால் கடத்திக் கொலை செய்யப்பட்டார்.

விஜய்க்கு தகவல்

விஜய்க்கு தகவல்

இப்போது, திருவனந்தபுரத்தில் 'லவ் டுடே' ஸ்ரீநாத், நள்ளிரவில் கட்-அவுட் கட்டிவிட்டு திரும்பியபோது விபத்தில் அகால மரணடைந்தது விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஸ்ரீநாத் மரணமடைந்த தகவல் நடிகர் விஜய்க்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

நடிகர்கள் அறிவுறுத்த வேண்டும்

நடிகர்கள் அறிவுறுத்த வேண்டும்

இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் இருக்க விஜய், தன் ரசிகர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. விஜய் மட்டுமல்ல மற்ற நடிகர்களும் தங்களது ரசிகர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும். என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X