TVK Vijay: விஜய் போட்டியிடும் தொகுதி.. தியேட்டர்களை கணக்கிடும் வியூகக் குழு.. உங்க தொகுதியில் எத்தனை இருக்கு?

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளார். அதற்கான பணிகளில் அவரும் அவரது கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படி இருக்கும்போது அவரது கட்சி உறுப்பினர்கள் தொடங்கி ரசிகர்கள், மாற்றுக் கட்சியினர் என பலரும் கேட்டு வரும் கேள்வி, விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது தான்.

இந்திய அரசியலமைச் சட்டத்தின் படி ஒரு போட்டியாளர் இரண்டு தொகுதிகளில் ஒரே நேரத்தில் போட்டியிட முடியும். எனவே இந்த தேர்தலில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஒரு தொகுதி திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதலமைச்சராகி உள்ள சென்னை, பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக ஒரு பேச்சு எழுந்து வருகிறது.

Vijay s Election 2026 Constituency Buzz TVK Team Analyses Theatre Strength Before Final Decision

விஜய் போட்டியிடும் தொகுதி: இதுவரை தமிழ்நாடு அரசியல் களத்தில் இரண்டு முதலமைச்சர் வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிட்ட வரலாறு இல்லை. ஆனால் இம்முறை விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வில்லை என்றால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ஒரு தொகுதி தலைநகர் சென்னையில் இருக்கும் என்றும், மற்றொரு தொகுதி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் இருக்கும் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

தியேட்டர்களுக்கு முக்கியத்துவம்: தவெக வியூகக் குழு சார்பில் சில விதிகளுக்கு உட்படும் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் விஜய் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எந்தெந்த தொகுதிகளில் அதிக அளவில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது என்பதில் தொடங்கி, எந்த தொகுதியில் அதிக தியேட்டர்கள் உள்ளது, அதில் எந்த தொகுதியில் உள்ள தியேட்டர்களுக்கு விஜய் படத்திற்கு அதிக கூட்டம் கூடியது, அதிக வசூல் வசூலித்தது உள்ளிட்டவற்றை அவரது வியூகக் குழு ஆய்வு செய்து வருகிறதாம்.

Vijay s Election 2026 Constituency Buzz TVK Team Analyses Theatre Strength Before Final Decision

ரசிகர்கள் ஆர்வம்: இதன் அடிப்படையிலேயே விஜய்யின் இரண்டாவது தொகுதி முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது தமிழ் நாடு அரசியல் களத்திலும் திரைத்துறையில் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக உள்ளது. இந்த தகவலைக் கேட்ட பலரும் தங்களது தொகுதியில் எத்தனை தியேட்டர்கள் உள்ளது என்பது குறித்து கணக்கிடத் தொடங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X