மேடையிலேயே கண் கலங்கிய விஜய்.. ரசிகர்களிடம் கெஞ்சி வேண்டுகோள்.. இனியாவது திருந்துவார்களா?

சென்னை: நடிகர் விஜய் தனது கட்சி வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதில் பல விஷயங்கள் குறித்து பேசினார். அவரது பேச்சில் ஆளும் கட்சியான திமுக குறித்த விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் வழக்கம் போல அதிகம் இருந்தாலும், வேலூரில் அவர் பேசியதில் சில விஷயங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

அதாவது, அவர் பேசுகையில், இந்த தேர்தல் ஏதோ, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் என்று நினைத்துவிடாதீர்கள். இது ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல். இப்படி இருக்கும்போது, இந்த தேர்தலை மக்கள் தவறவிடக்கூடாது. இந்த தேர்தல் ஊழலுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நடக்கும் போர், லஞ்சத்திற்கு தமிழ்நாட்டு மக்களுக்கும் நடக்கும் போர், தமிழ்நாட்டு மக்கள் என்றால் அது இந்த விஜய் தான். இந்த விஜய்யையும் தமிழ்நாட்டு மக்களையும் பிரிக்க முடியாது.

Vijay s Emotional Pitch in Vellore An Attack on Me is an Attack on the People Special Request to Fans
Photo Credit:

அவதூறு: என் மேல் என்னென்ன அவதூறுகள் பரப்புகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். என் மீது அவதூறு பரப்பினால் அது மக்கள் மீது அவதூறு பரப்புவதை போன்றது. எனக்கு அரசியல் தெரியவில்லை என்று சொன்னால் அது மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்வதைப் போன்றது. என்னை அசிங்க அசிங்கமாக பேசினால் அது மக்களை அசிங்க அசிங்கமாக பேசுவதைப் போன்றது. எனக்கு எதிராக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மக்களுக்கு எதிராக செய்யப்படும் செயல் என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.

கண்ணீர்: இந்த விஜய்யும் மக்களும் வேறு வேறு இல்லை. இந்த விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் போல, உடலும் உயிரும் போல. ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவே முடியாது. சென்சிட்டிவான செண்டிமெண்ட் அது" என்று கத்திப் பேசினார். விஜய் இவ்வாறு பேசியதும் மேடையிலேயே சில வினாடிகள் அமைதியாக நடந்தார். அதேபோல் மிகவும் எமோஷனலும் ஆகி, கண் கலங்கினார். அவர் எமோஷனல் ஆனதால் அடுத்த பேச கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டதால் நிர்வாகிகளிடம் மன்னிப்பும் கேட்டார். விஜய் எமோஷனல் ஆனதும் அவரது ரசிகர்கள் உடனே அவரைப் பார்த்து ஆரவாரம் செய்து விஜய்யை ஆசுவாசப்படுத்தினர்.

Vijay s Emotional Pitch in Vellore An Attack on Me is an Attack on the People Special Request to Fans
Photo Credit:

வேண்டுகோள்: அதேபோல் தனது உரையை முடித்துவிட்டு, கடைசியாக தனது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை நோக்கி, கையெடுத்து கும்பிட்டு, தயவு செய்து தனது வாகனத்தை யாரும் பின் தொடர வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். வேலூருக்கு வரும் வழியில் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கீழே விழுந்தனர். அது பேசு பொருளாக மாறியது. மேலும் விஜய் எப்போது சாலை மார்க்கமாக பயணித்தாலும் அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் அவரது வாகனத்தை பின் தொடர்ந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதைச் செய்ய வேண்டாம் என்று விஜய் தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இனிமேலாவது விஜய் ரசிகர்கள் திருந்துவார்களா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X