வெங்கட் பிரபு கூட ஒரு படம் பண்ணுங்க ப்ளீஸ்: விஜய்க்கு ரசிகர்கள் வேண்டுகோள்

இயக்குனர் வெங்கட் பிரபு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விளையாட்டு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அதில் கலந்து கொண்ட நடிகர் விஜயின் ரசிகர்கள் நிகழ்ச்சி மூலமாக தங்கள் இளைய தளபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதாவது விஜய் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் வேண்டுகோள். இதை விஜய் ஏற்பாரா என்று தெரியவில்லை.
வெங்கட் பிரபு அஜீத் குமாரை வைத்து எடுத்த மங்காத்தாவின் வெற்றியைப் பார்த்துவிட்டு விஜயை நடிக்கச் சொல்கிறார்கள் என்று தெரிகிறது. விஜயும் சரி, வெங்கட் பிரபுவும் சரி தற்போது அவரவர் படங்களில் பிசியாக உள்ளனர்.
சரி எது எப்படியோ அவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றுவார்களா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
Comments


Click it and Unblock the Notifications