பிரியாணியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விஜய் அப்பா எஸ்ஏசி... கூட யார் இருக்காங்கன்னு தெரியுமா?

சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் அம்மாவும் அப்பாவும் கலந்து கொண்டனர்.

ஆனாலும் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தனது அம்மா ஷோபா, அப்பா எஸ்ஏசி இருவருடனும் விஜய் சரியாக பேசிக்கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் அப்பா எஸ்.ஏ.சி கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன

 வாரிசு இசை வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சி

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சி

விஜய்யின் வாரிசு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வாரிசு இசை நிகழ்ச்சியில், விஜய்யின் அம்மா ஷோபா, அப்பா எஸ்.ஏ.சி இருவரும் கலந்துகொண்டனர். அவர்கள் இருவரும் விழா அரங்கில் நுழைந்த போது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். விஜய் நடிகராக அறிமுகமானதில் இருந்து அவர் முன்னணி நடிகராக வலம் வரும் வரை அம்மா, அப்பா இருவரும் ஆதரவாக இருந்தனர்.

 நீண்டநாட்களுக்குப் பிறகு சந்திப்பு

நீண்டநாட்களுக்குப் பிறகு சந்திப்பு

நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் தனது அம்மா, அப்பா இருவரையும் வாரிசு ஆடியோ ரிலீஸ் விழாவில் தான் சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து அவரது அப்பா எஸ்ஏசி தன்னிச்சையான முடிவு எடுத்ததால் தான் இருவரையும் விஜய் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அம்மா, அப்பாவிடம் விஜய் சரியாக பேசிக்கொள்ளவில்லை என செய்திகள் வெளியாகின.

 கிறிஸ்துமஸ் கொண்டாடிய எஸ்.ஏ.சி

கிறிஸ்துமஸ் கொண்டாடிய எஸ்.ஏ.சி

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் அம்மா, அப்பா கலந்துகொண்டது வைரலான நிலையில், தற்போது மீண்டும் ட்ரெண்டாகியுள்ளார் எஸ்ஏசி. ஆண்டுதோறும் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி வரும் நிலையில், இந்தாண்டும் கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. அதன்படி இந்த வருடம் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ள எஸ்.ஏ.சி, ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள் கொடுத்து மகிழ்ந்துள்ளார். மேலும், அவர்களுக்கு பிரியாணி விருந்தளித்துள்ள எஸ்.ஏ.சி, அவர்கள் அருகிலேயே அமர்ந்து உணவும் சாப்பிட்டுள்ளார்.

 விஜய்யை தேடும் ரசிகர்கள்

விஜய்யை தேடும் ரசிகர்கள்

விஜய் அப்பா எஸ்.ஏ.சி கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் அப்பாவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். அதேபோல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய்யை எங்கே எனவும் கேட்டு வருகின்றனர். வாரிசு இசை வெளியீட்டு விழா முடிந்த மறுநாளே விஜய் அப்பாவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X